Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
NOLIMIT அதன் பாணந்துறை காட்சியறையை மீளத்திறந்துள்ளது. 2014இல் மூடப்பட்ட இக்காட்சியறையானது புதிதாக புனரமைக்கப்பட்டு பாணந்துறை வாழ் மக்களுக்கு சேவையாற்ற மீண்டும் திறந்துள்ளது.
இக்காட்சியறை திறப்புவிழாவை முன்னிட்டு NOLIMIT பாணந்துறை மற்றும் அதனை சூழவுள்ள வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிமிக்க ஷொப்பிங் அனுபவத்தை வழங்கியது.
அத்தோடு, சிறுவர்களை குதூகலப்படுத்தும் face painting மற்றும் இரவு வேளைகளில் கண்கவர் லேசர் காட்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தது. வாடிக்கையாளர்கள் வசதியாகவும் இலகுவாகவும் காட்சியறையை வந்தடைய மொரட்டுவை மற்றும் பேருவளை ஆகிய இடங்களிலிருந்து விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இலக்கம் 266 காலி வீதியில் பாணந்துறையின் மத்தியில் அமைந்துள்ள இக்காட்சியறை மக்கள் இலகுவாக அடையக்கூடியதாக உள்ளதோடு விசாலமான தரிப்பிட வசதியுடனும் சிறிய உணவகத்துடனும் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக ஷொப்பிங் செய்யக்கூடிய அனுபவத்தையும் வழங்குகிறது. இக்கட்டிடம் மாற்றுத்திறனாளிகளை கருத்திற்கொண்டு அவர்களையும் வரவேற்கும் முகமாக அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்விசாலமான காட்சியறையில் ஆடை, அணிகலங்கள் மற்றும் நவீன வாழ்க்கைத் தரத்திற்கேற்றவாறு NOLIMIT இற்கே உரித்தான வர்த்தக நாமங்களான MBRK, Deedat, Salma, Huf & Dee, Pallu, Pink Elephant, NLM, Home & Me, ZED, Sara, Amr மற்றும் Singing Fish ஆகியவற்றின் ஊடாக அனைவருக்கும் ஏற்ற பல்தரப்பட்ட தெரிவுகளை வழங்குகின்றது.
“சில காலங்களுக்கு முன் NOLIMIT இன் மாபெரும் காட்சியறையாகவும் சிறப்பாக இயங்கி வந்த கிளையாகவும் விளங்கிய பாணந்துறை காட்சியறையை மீளத்திறப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். NOLIMIT இல் நாம் எப்போதும் சிறந்த தரத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அவர்களின் நவநாகரிக தேவைகளை பூர்த்தி செய்வதையும் நோக்காகக் கொண்டுள்ளதோடு, இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வலுச்சேர்த்து வருகிறோம்.
இதற்காக எமக்கு தமது பூரண ஆதரவை அளித்து வரும் எமது விசுவாசமிகு வாடிக்கையாளர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்” என, NOLIMITஇன் பொது முகாமையாளரான அம்ஜட் ஹஸன் தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “NOLIMIT, இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதுடன், அவர்களை சர்வதேச தரத்துக்கு இணையான தொழில்சார் வல்லுநர்களாக பயிற்றுவிப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் இலங்கையை சுற்றுலாத் துறையின் சிறுவணிக மையமாக மாற்றுவதில் பங்குவகிக்கின்றது” என்றார்.
53 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
3 hours ago