Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 06 , பி.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாத் அக்கடமியின் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்களின் இடமாற்றல் திட்டத்தை (OUT- Overseas University Transfer) அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் கல்வி கற்பதற்கு, எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு தற்போதுள்ள சேவைகளில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு OUT திட்டத்தினால் உதவிகளை வழங்க முடியும். பாத் அக்கடமியில் அமைந்துள்ள பாத் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு பாடநெறியின் 1ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்கின்ற மாணவர்களுக்கு வர்த்தகக் கல்வி சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு, 2அம் ஆண்டுக்கு அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் அமைந்துள்ள 40க்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்களில் ஒன்றை தெரிவு செய்து கொள்ள முடியும்.
எமது நாட்டு மாணவர்களுக்கு, நியாயமான விலையில் வர்த்தக கற்கைத் துறையில் 50க்கும் மேற்பட்ட பட்டப்படிப்பு பாடநெறிகளில் தனக்கு பிடித்தமான பட்டப்படிப்பை மேற்கொள்ள முடிவது பாத் மாணவ இடமாற்றல் திட்டத்தின் சிறப்பம்சமாகும். சர்வதேச தரத்திலான மேற்படி பாடநெறிகள் இணையக் கருத்தரங்கு, ஒன்லைன் விரிவுரைகள், வெளிநாட்டுத் தொழில்நுட்ப பயிற்சி அமர்வுகள் போன்ற அம்சங்களை கொண்ட நவீன கற்பித்தல் முறைமைகளுடன் கூடிய பாடநெறிகளாகும்.
மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகமொன்றுக்கு, இடம் மாறும் போது, பாத் அக்கடமியின் வெளிநாட்டுக் கற்கைப் பிரிவு வெளிநாட்டுப் பல்கலைக்கழக அனுமதி சார்ந்த செயற்பாடு மற்றும் வீசா விண்ணப்பித்தலுக்கு கட்டணமேதுமின்றி வழிகாட்டுவதோடு ஆங்கிலப் பிரிவு IELTS அல்லது TOEFL தகைமைகளை பெறுவதற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் செயற்பாட்டை மேற்கொள்கிறது. பாத் அக்கடமி IELTS/TOEFL பரீட்சைகள் பதிவு செய்யும் மத்திய நிலையமாகவும் விளங்குகிறது.
14 minute ago
19 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
3 hours ago
6 hours ago