2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

புதிய படைப்பாக'போசியா ரெசிடன்சிஸ் அடுக்கு மாடி கட்டடம்'

Kogilavani   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோம் லான்ட் ஸ்கைலைன்” நிறுவனத்தின் அடுத்த வெற்றிக்கதையாக புதிய அடுக்கு மாடி கட்டடத்தினை நாவல வீதி நுகேகொடயில் அமைக்க தெரிவு செய்துள்ளது. புதிய முயற்சியின் முதல் வெற்றிக் கட்டமாக, பொரளையில் “ட்ரசர் ட்ரோ” வும், அத்துருகிரியில் “கிரீன் வலீ” உம், தொடக்க விழாவின்போது, 75% முதல் நாளிலேயே விற்பனையாகி சாதனை புரிந்ததில் பெருமைகொள்கிறது. இந்த நிறுவனம் மேற்கொள்ளும் மேலுமொரு புதிய அடுக்கு மாடிக் கட்டடம், இளம் நகர்வாழ் நபரின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வேகமாக மாறிவரும் வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்றவாறும் அமைத்து சாதனைப் புரிய வரவிருக்கின்றது. “ஹோம் லான்ட் ஸ்கைலைன்” தனது புதிய அடுக்கு மாடிக் கட்டடத்துக்கு “போஷியா ஸ்கைலைன் ரெசிடன்சிஸ்” என பெயரிட்டுள்ளது.

“போஷியா” என்பது உலகப் பிரசித்திபெற்ற சேக்ஸ்பியரின் நாடகத்தொடரில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் பெயரையே இதற்கு சூட்டப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பரஸ்பரம் முழுமையாக நன்மையளிக்கும் என “ஹோம்லான்ட் ஸ்கைலைன்” நிறுவனம் நம்பிக்கை அளிக்கின்றது. இன்று நாவல மற்றும் நுகேகொட பகுதிகள், அனைத்து வசதிகளும் செல்வாக்கும் கொண்ட நகரமாக திகழ்கின்றது.

இங்கு பல வங்கிகள், நிதி நிறுவனங்கள், புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் தலைமையிடமாகவும் இப் பிரதேசம் இருக்கின்றது. வடக்கில் “தியவன்ன ஓயா” வையும் தெற்கில் வெள்ளவத்தை கடலோரத்தையும் இது முடிவிடமாகக் கொண்டுள்ளது.நாவல, அலுவலகங்கள், வங்கிகள், உணவகங்கள், வன் பொருள் மையங்கள் என பல வர்த்தகத்துறை நிறுவனங்கள் இயங்கி வரும் இடமாகவும், பசுமை நிறைந்த பகுதியாகவும் திகழ்கின்றது.“வெலி பார்க்” நாவல என அழைக்கப்படும் “ஈரநில” பூங்கா இப்பகுதிக்கு கிடைத்தப்ற பசுமை நிறைந்த பகுதியாக இருக்கின்றது. இத்தொகுதியை தெரிவு செய்து அங்கு ஒரு பகுதியில் அடுக்கு மாடித் கட்டடத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X