2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

புனரமைப்பு பணிகளுக்கு நெர்லாந்து, சீனா ஆலோசனை

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள், 2017 ஜனவரி 6ஆம் திகதி முதல் ஏப்ரல் 6ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இதற்கான ஆலோசனை சேவைகளை சீனா மற்றும் நெதர்லாந்திடம் பெற்றுக் கொள்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமானநிலைய மற்றும் ஆகாய போக்குவரத்து சேவைகள் லிமிட்டட் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜொஹான் ஜயரட்ன தெரிவித்தார்.

இந்தப் புனரமைப்பு செயற்பாடுகளுக்கு 524,000 அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இதனை விமானநிலைய மற்றும் ஆகாய போக்குவரத்து சேவைகள் லிமிட்டட் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆகியன இணைந்து வழங்கும் என அறிவித்துள்ளன.இந்த செலவீனத்துக்கு மேலதிகமாக 48,600 அமெரிக்க டொலர்களை விமானநிலைய மற்றும் ஆகாய போக்குவரத்து சேவைகள் லிமிட்டட் முதலீடு செய்துள்ளதாக ஜயரட்ன மேலும் தெரிவித்தார்.

இந்தப் புனருத்தாரண காலப்பகுதியில் விமானநிலையத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படும் எனவும், அக்காலத்தில் சகல தரப்பினர்களுக்கும் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை எவ்வாறு தவிர்த்துக் கொள்வது என்பது தொடர்பில் சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக சிவில் ஆகாய போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமலசிறி தெரிவித்தார்.

புனருத்தாரணச் செயற்பாடுகள் நடைபெறும் காலப்பகுதியில் விமான நிலையத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படுவது தொடர்பில், சகல விமான சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இக்காலப்பகுதியில் மத்தல விமான நிலையத்துக்கு தமது சேவைகளை மாற்றுதுக்கு எந்தவொரு நிறுவனமும் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை எனவும், இதற்கு மத்தள விமானநிலையத்தில் காணப்படும் குறைந்த வசதிகள் மற்றும் தொடர்பாடல் சிக்கல்கள் போன்றன பிரதான காரணிகளாக அமைந்துள்ளதாக கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X