Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கம் மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டாண்மை முகவர் அமைப்பு JICA ஆகியன 10,000 மில்லியன் ஜப்பானிய யென் பெறுமதியான (இலங்கை ரூபாயில் 14.45 பில்லியன்) கடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
இவ் உடன்படிக்கையில் இலங்கை நிதி அமைச்சின் திறைசேரியின் பதில் செயலாளர் சந்திர ஏக்கநாயக்க மற்றும் JICA அமைப்பின் உப தலைவரான ஹிடெடொசி இரிகாகி ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர். இந்நிகழ்வு நிதி அமைச்சில் நடைபெற்றது.
அபிவிருத்தி கொள்கை கடன் (தனியார் துறை அபிவிருத்தி, அரசாங்க அபிவிருத்தி மற்றும் துண்டுவிழும்தொகை நிரப்பல்) உலக வங்கியுடன் இணைந்து வழங்கப்படவுள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தின் கொள்கை மற்றும் நிறுவனசார் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு உதவிகளை வழங்குவதுடன், தனியார் துறையின் போட்டிகரத்தன்மை தடைகளைக் குறைப்பது, வெளிப்படையான மற்றும் முறையான நிர்வகிக்கக்கூடிய நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தின் காணப்படும் குறைத்தொகையை நிவரத்திசெய்ய உதவியாக அமைந்துள்ளது. பொருளாதார மற்றும் துறைசார் போட்டிகரத்தன்மையை மேம்படுத்தும் வகையில் இந்நடவடிக்கைகள் அமைந்துள்ளதுடன், அதனூடாக இலங்கையின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கும்.
மேலதிக வரி அறவீடுகள் மற்றும் செலவீனங்களை குறைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடதுடன், வெளிப்படையான சிக்கனமான வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான முயற்சிகளில் தனியார் துறைக்கு முழுமையான வினைத்திறனை எய்துவதற்காக நேரடி வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்துவது போன்றன உள்ளடங்கியுள்ளன.
இந் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுக்கு தேசிய கொள்கைள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு பொறுப்பாக செயற்படும். அபிவிருத்தி கொள்கைகள் மற்றும் சர்வதேச வியாபார அமைச்சு, நிதி அமைச்சு, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் பொது ஊடகங்கள் அமைச்சு, கணக்காய்வு பணிப்பாளர் நாயகம் திணைக்களம், முதலீட்டு சபை மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியன இதற்காக உதவிகளை வழங்குகின்றன.
JICA கடன் என்பது விசேட 1.4% வருடாந்த வட்டி வீதத்தில், 25 வருடங்களில் மீளச்செலுத்தக்கூடிய வகையில் வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப ஒன்றிணைவு, சகாய கடன் உதவி மற்றும் நன்கொடை போன்றவற்றினூடாக இலங்கையின் நிலையான வளர்ச்சிக்கு JICA தொடர்ந்து உதவிகளை வழங்கும்.
56 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
3 hours ago