2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பார்வை குறைபாட்டு சங்கத்துக்கு உதவிக்கரம் நீட்டும் மஹாபொல லொட்டோ

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல இலங்கையர்களுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது எனும் தனது உறுதிமொழிக்கமைய, லொத்தர்கள் விற்பனையில் முன்னோடியாக திகழும் மஹாபொல லொட்டோ, இலங்கை பார்வைக்குறைபாட்டு சங்கத்துக்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில் கொழும்பு 02 இல் அமைந்துள்ள சம்மேளனத்தின் தலைமையகத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவிகளை வழங்க இந்த அமைப்பு தீர்மானித்துள்ளது. இந்த சம்மேளனம் நான்கு தசாப்த காலங்கள் பழமையானது என்பதுடன், 1974 இல் ஸ்தாபிக்கப்பட்டது முதல், ஆயிரக்கணக்கானோரின் பார்வை குறைபாடுகளை கொண்டோருக்கு பெருமளவு உதவிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக வர்த்தக நிறுவனங்களினூடாக. இதன் மூலமாக அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட்டிருந்தது.

முக்கியமாக, மஹாபொல லொட்டோ, சம தொழில்வாய்ப்பு வழங்குநர் என புகழ்பெற்றுத் திகழ்கிறது. மாற்றுத்திறன் படைத்த பெருமளவானோர் டிக்கட் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் இதர வியாபார துறைகளில் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு இது பெரும் உதவியாக அமைந்துள்ளது. பெருமளவான சந்தர்ப்பங்களில் அவர்களின் பிரதான வருமான மூலமாக மஹாபொல லொட்டோ திகழ்வதுடன், தினசரி வருமானத்தை பெற்றுத்தரும் ஒரே மூலமாகவும் இந்தத்துறை திகழ்கிறது. சமூகம் தொடர்ச்சியாக இவர்களுக்கு எல்லைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பல்வேறு செயற்பாடுகளிலிருந்து இவர்களை ஓரங்கட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சம்மேளனத்துடனான இந்த பங்காண்மையின் அங்கமாக, மஹாபொல லொட்டோவின் நன்கொடையைக் கொண்டு, கல்வி, தொழில் ஆளுமை பயிற்சி மற்றும் சம்மேளனத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய சகல நவீன வசதிகளையும் கொண்ட பகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் மூலம், இலங்கையைச் சேர்ந்த பார்வைக் குறைபாட்டைக் கொண்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மேலதிக சம வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதை நோக்காக கொண்டுள்ளனர். 

சகல குடிமக்களுக்கும் சம கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதை நோக்காக கொண்டு, இந்த நன்கொடையை வழங்க மஹாபொல லொட்டோ முன்வந்திருந்தது. இலங்கையர்களுக்கு இயலுமானவரை உதவிகளை வழங்கக்கூடிய வகையில் மஹாபொல லொட்டோ உருவாக்கப்பட்டிருந்தது. மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வது என்பது பிரச்சினையாக அமைந்துள்ளதுடன், இது போன்ற செயற்பாடுகள் அவர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருக்கும். இவ்வாறான செயற்பாடுகள், அவர்களுக்கு சமூகத்துக்கு மீள வழங்குவதற்கு உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் மூலமாக இது போன்ற செயற்பாடுகளை மஹாபொல லொட்டோ பெருமையுடன் முன்னெடுக்கிறது.

மேலும், 'உங்கள் அதிர்ஷ்ட இலக்கங்களை நீங்களே தெரிவு செய்யுங்கள்' எனும் தொனிப்பொருளில் தொடர்ச்சியாக இலங்கையின் அதிர்ஷ்டலாபச் சீட்டுத் துறையில் புத்தம்சங்களை மஹாபொல லொட்டோ அறிமுகம் செய்த வண்ணமுள்ளது. இதில் மிகவும் பிந்திய அம்சமாக தனது 20 ரூபாய் டிக்கட்டை அறிமுகம் செய்திருந்தது. லொத்தர்கள் புத்தமைவாளர், பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்புகளுக்கு தொடர்ச்சியாக தமது பங்களிப்பை வழங்கிய வண்ணமுள்ளது. அரசாங்கத்தினால் மேற்பார்வை செய்யப்படும் உயர் கல்வி நம்பிக்கை நிதியமான மஹாபொல நிதியத்துக்கு தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்களவு நிதிப் பங்களிப்பை வழங்கி வருகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X