Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனரஞ்சகமான உள்ளூர் விளையாட்டுக் காலணிகளின் வர்த்தக அடையாளமான AVI, பார்வையிழந்தோருக்கான இரண்டாவது உலக வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான இலங்கையின் பார்வையிழந்த வீரர் கிரிக்கெட் குழுவுக்கு கூட்டு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. இந்தப் போட்டிகள் பெப்ரவரி 12ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
நிறுவனத்தின் கூட்டிணைப்பு சமூகப் பொறுப்புணர்ச்சித் திட்டத்தினது, ஊக்கத்தின் அடிப்படையிலான இந்த வர்த்தக அடையாளத்தினது அனுசரணையின் அடிப்படை நோக்கம், உள்ளுர் வீரர்களின் விளையாட்டுத்திறனை விருத்தி செய்வதற்கு உதவுவதும், விளையாட்டு வீரர்கள் உள்ளுர் மற்றும் சர்வதேச விளையாட்டரங்குகளில் அங்கிகாரத்தைப் பெறுவதற்கான சக்தி வளத்தை விளையாட்டு வீரர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதுமாகும். இந்தக் கூட்டு அனுசரணை பற்றி டி செம்சன் அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் கௌசல்ய பெரேரா கருத்து வெளியிடுகையில், “எமது கூட்டிணைப்பு சமூகப் பொறுப்புணர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக அனுசரணைக்கு பங்குதாரராக இருப்பது மாத்திரமல்லாமல், அதற்கு அப்பாலும் உதவுவதே எமது நோக்கமாகும்” என்று கூறினார்.
உண்மையில், எமது பங்களிப்பானது, பயனாளிகளுக்குப் பெறுமதியுள்ளதாக விளங்க வேண்டும் என்பது எமது நம்பிக்கையாகும். AVI என்பது, இலங்கையின் விளையாட்டுக் காலணிகளுக்கான வர்த்தகப் பெயராகும். இது, எமது விளையாட்டுக் குழுவினரை மேலதிக செயற்றிறனுக்கு இட்டுச் செல்லவிருக்கிறது. பார்வையிழந்த தேசிய கிரிக்கெட் குழுவுக்குப் பங்களிப்பைச் செய்வது, DSIஇன் ஒரு பெறுமானமான குறைபாடுகளை வென்றெடுக்கும் கருத்துக்கு சாட்சியாக இருப்பதனால், இத்தகைய பங்களிப்பு எமக்கு ஒரு கௌரவமாகும்” என்று கூறினார்.
AVI வரிசையில் அமைந்த விளையாட்டுக்கான சப்பாத்துக்கள், கடந்த பல வருட காலமாக, சம்பந்தப்பட்ட விளையாட்டில் விளையாட்டு வீரர்கள் உச்சக்கட்ட செயற்திறனைப் பெற்றுக் கொள்வதை நிச்சயிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளன. கிரிக்கட், மெய்வல்லுநர் போட்டிகள், பட்மின்டன், கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களுக்கான காலணிகளுக்கு இந்த வர்த்தகப் பெயர் வரிசை பிரபல்யம் பெற்றதாகும். இந்தக் காலணி, இலங்கை மக்களுக்கென கவர்ச்சிகரமான, சிக்கனமான விலையில் நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள DSI காட்சி கூடங்களில் விற்பனைக்கிடப்படுகின்றது.
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025