2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பிரதிநிதிகளுக்கான வரவேற்பு நிகழ்வு

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவில் விமான போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் 400க்கும் மேற்பட்ட உயர் மட்ட பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் பாரியார்கள் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய விமானப் போக்குவரத்து பிரதிப் பணிப்பாளர்களின்  53 ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலமாக ஒழுங்கு செய்யப்பட்ட சிவில் விமான போக்குவரத்து மாநாட்டு வரவேற்பு மற்றும் விருந்துபசார நிகழ்வு BMICH இல் மிகவும் நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. BMICH இன் முன்பக்க மேல்தளமானது வெளியக வரவேற்பு நிகழ்வுகளுக்கேற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  

BMICH இல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலமாக ஒழுங்கு செய்யப்பட்ட சிவில் விமானப் போக்குவரத்து மாநாட்டு வரவேற்பு நிகழ்வை முன்னெடுத்ததையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். முந்தைய மற்றும் பிந்தைய மாநாட்டு வரவேற்பு நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கான சிறந்த அமைவிடமாக BMICH இன் வெளிப்புற மற்றும் மண்டபங்களைக் காட்சிப்படுத்துவதற்கான அற்புதமான வாய்ப்பாக இதுவமைந்திருந்தது' என BMICH இன் நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளருமான சுனில் திசாநாயக்க தெரிவித்தார்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சிவில் விமானப்போக்குவரத்தின் பொது முகாமையாளர்கள், சர்வதேச சிவில் விமானப்போக்குவரத்து அமைப்பின் தலைவர் மற்றும் பிரதி செயலாளர் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன் தலைவர், நிர்வாக சபை பணிப்ப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்த மாநாட்டில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பூட்டான், புரூனே, கனடா, சீனா, கிழக்கு தீமோர், பிஜி தீவு, பிரான்ஸ், பிரெஞ்சு பாலினேசியா, ஜேர்மனி, ஹொங்கொங், இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு, மக்கோ சீனா, மலேசியா, மாலைதீவு, மொங்கோலியா, மியன்மார், நேபாளம், நியு கலிடோனியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, பிலிப்பைன்ஸ், கொரியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் சோசலிசக் குடியரசு, டொங்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட 35 நாடுகள் கலந்து கொண்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X