2025 ஜூலை 26, சனிக்கிழமை

புற்றுநோய் நிலையமொன்றை ஆரம்பிக்க ஆசிரி ஹொஸ்பிட்டல்ஸ் நடவடிக்கை

Gavitha   / 2017 மார்ச் 30 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகத்தரம் வாய்ந்த சுகாதார பராமரிப்பு சேவைகளை இலங்கைக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்காவை தளமாகக்கொண்டியங்கும் புற்றுநோய் சிகிச்சை சேவை வழங்கும் பிரிவான American Oncology Institute உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் ஆசிரி ஹொஸ்பிட்டல்ஸ் கைச்சாத்திட்டுள்ளது. இதன் பிரகாரம், இலங்கையின் தனியார் துறையில் முதலாவது பரிபூரண புற்றுநோய் பராமரிப்பு நிலையமொன்றை ஆரம்பிக்க ஆசிரி ஹொஸ்பிட்டல்ஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  

ஆசிரி சேர்ஜிகல் ஹொஸ்பிட்டலில் நிறுவப்பட்டிருக்கும் இந்த நிலையத்தின் மூலமாக, Medical Oncology, Surgical Oncology மற்றும் நவீன Radiation Therapy ஆகியவற்றை புதிய தலைமுறை linear accelerator ஊடாக வழங்க முன்வந்துள்ளது. வைத்தியசாலையின் மூலமாக ஏற்கனவே PET ஸ்கான் நோய் இனங்காணல் சேவைகளை medical oncology மற்றும் surgical oncology சேவைகளுடன் வழங்குகிறது.American Oncology Institute (AOI) என்பது அமெரிக்காவை தளமாகக்கொண்டியங்கும் புற்றுநோய் சிகிச்சை சேவை சர்வதேச பிட்ஸ்பர்க்கின் சர்வதேச பிரிவாக அமைந்துள்ளது. பிட்ஸ்பர்க் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய oncologists குழுவினர் இணைந்து இந்த அமைப்பை நிறுவியிருந்தனர். அமெரிக்காவில் புற்றுநோய் சேவைகளை வழங்குவதில் முன்னணியில் திகழும் அமைப்பாக தொடர்ச்சியாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது.  

2012இல், AOI இனால் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் முதலாவது நிலையம் நிறுவப்பட்டிருந்தது. அன்று முதல், பிராந்தியத்தில் வெவ்வேறு வலையமைப்பு நிலையங்களை அமெரிக்க பல்கலைக்கழக மட்ட தர புற்றுநோய் சிகிச்சை வசதிகளுடன் நிறுவியிருந்தது. 

இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட வண்ணமுள்ளது. நாட்டின் புற்றுநோய் பதிவின் பிரகாரம், ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இனங்காணப்படுவது 2008இல் 1,1163ஆகக் காணப்பட்டதிலிருந்து 2015இல் 13,890ஆக அதிகரித்திருந்தது. ஆண்கள் மத்தியில் வாய் புற்றுநோய் மற்றும் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் என்பது அதிகரித்துக் காணப்படுகிறது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இது மாபெரும் பிரச்சினையாக அமைந்துள்ளதுடன், 10இல் ஒரு இலங்கையருக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகிறது. இந்நோயை கட்டுப்படுத்தித் தடுக்கும் நோக்குடன் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X