2026 மே 07, வியாழக்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சைக் கருத்தரங்கு நிறைவு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் நலன் கருதி, சம்பத் வங்கியினால் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டிருந்த 'ஐந்தாம் தர புலமைப்பரிசில் கருத்தரங்குத் தொடரின் இறுதிக்கருத்தரங்கு பதுளை நகரில் அமைந்துள்ள ஊவா மாகாண பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் 900க்கும் அதிகமான மாணவர்களும், 600க்கும் அதிகமான பெற்றோர்களும் பங்கேற்றிருந்தனர்.

கடந்த 3 மாதங்களில், நெத் fm உடன் இணைந்து சம்பத் வங்கி 'ஐந்தாம் தர புலமைப்பரிசில்' கருத்தரங்குத் தொடரை மித்தெனிய, பண்டாரகம, கெகிராவ, கண்டி, ஹற்றன், அம்பாறை மற்றும் பதுளை ஆகிய நகரங்களில் மிகவும் வெற்றிகரமாக நடத்தியிருந்ததுடன் இதன் மூலம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 9000க்கும் அதிகமான மாணவர்களுக்குத் தம்மை பரீட்சைக்குத் தயார்ப்படுத்திக் கொள்ள உதவியாகவும் அமைந்திருந்தது.

ஓவ்வொரு வருடமும் 350,000க்கும் அதிகமான மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இதில் சராசரியாக 10 சதவீதமானவர்கள் மட்டுமே வெட்டுப்புள்ளிகளை விட அதிகமான புள்ளிகளை பெறுகின்றனர். 'ஐந்தாம் தர புலமைப்பரிசில்' கருத்தரங்கு என்பது சம்பத் வங்கியினால் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படுவதன் மூலமாக, மாணவர்களுக்கு தேசிய மட்ட பரீட்சைக்கு பயமின்றி தோற்றுவதற்கான தகைமையைப் பெறுகின்றனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்நோக்கும் உள ரீதியான அழுத்தங்களை கவனத்தில் கொண்டு, சம்பத் வங்கி வௌ;வேறு நகரங்களில் முன்னெடுத்திருந்த 'ஐந்தாம் தர புலமைப்பரிசில்' கருத்தரங்குகளில் 5000க்கும் அதிகமான பெற்றோர்களுக்கான விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தன.

இதன் போது, இந்த காலப்பகுதியில் தமது குழந்தைகளுக்கு எவ்வாறான உதவிகளையும், ஊக்குவிப்புகளையும் வழங்குவது பற்றிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன. வங்கியின் நிதிசார் நிபுணத்துவத்தைக் கொண்டு, குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, தமது குடும்ப வருமானத்தை எவ்வாறு கட்டுக்கோப்பான வழியில் செலவிடுவது பற்றிய குறிப்புகளும் இந்த பெற்றோருக்கு வழங்கப்பட்டிருந்தன.  

சம்பத் புபுது மற்றும் சம்பத் சுபிரி கணக்குகளை வைத்திருக்கும் மாணவர்கள், எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெறும் பட்சத்தில், அவர்களுக்கு வெகுமதிகளை வழங்கவும், அவர்களின் பாடசாலைகளுக்கு வெகுமதிகளை வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .