2026 மே 07, வியாழக்கிழமை

பங்குச்சந்தையில் அமானா டகாஃபுல் லைஃவ் பங்குகள்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமானா டகாஃபுல் லைஃவ் பங்குகள் கொழும்பு பங்குச்சந்தையில் இன்று முதல் பட்டியலிடப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து கொழும்பு பங்குச்சந்தைக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தலில் நிறுவனம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இதன் பிரகாரம், கொழும்பு பங்குச்சந்தையின் திரி சவி பலகையில் 50 மில்லியன் பங்குகள் பட்டியலிடப்படும் எனவும், அவை வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதி எனும் துறையின் கீழ் நிரல்படுத்தப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2016 ஜூலை 21ஆம் திகதி அதன் ஆரம்ப தினத்தில் வழங்கப்பட்ட 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஆரம்பப் பொது பங்கு வழங்கல் மிகைக்கேள்வியைப் பதிவு செய்திருந்தது. 50 மில்லியன் சாதாரணப் பங்குகளை 1.50 ரூபாய் வீதம் நிறுவனம் வழங்கியிருந்தது. இது நிறுவனத்தின் மொத்த பங்குகளின் 10 சதவீதத்தைப் பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .