2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கொமர்ஷல் வங்கிக் கிளை

Gavitha   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கொமர்ஷல் வங்கி தனது இரண்டாவது கிளையைத் திறந்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து வெளியேறிச் செல்லும் பயணிகளுக்குத் தேவையான வெளிநாட்டு நாணயமாற்று சேவை மற்றும் இதர சேவைகளை வழங்குவதற்காக இந்த இரண்டாவது கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கிளை வருடம் 365 நாளும் 24 மணிநேரமும் திறந்திருக்கும். நாட்டிலிருந்து வெளியேறிச் செல்லும் உள்நாட்டு வெளிநாட்டுப் பயணிகளுக்கு இது உரிய சேவைகளை வழங்கும் என்று வங்கி அறிவித்துள்ளது.

இது இலங்கையில் திறந்து வைக்கப்பட்டுள்ள வங்கியின் 248ஆவது கிளையாகும். இங்கு வங்கியின் ATM இயந்திரம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் இதே போன்ற ஒரு கிளை விமான நிலையத்தின் பயணிகள் வருகை தரும் பிரிவில் திறந்து வைக்கப்பட்டது.

கொமர்ஷல் வங்கிக்கு சீதுவையிலும் ஒரு கிளை உள்ளது. இந்தக் கிளை காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை 365 நாற்களும் திறந்திருக்கும். விமான நிலையத்துக்கு வருகை தரும் பயணிகளினதும் பிரதேச மக்களினதும் நலன் கருதி இது செயற்படுகின்றது.

பயணிகள் வெளிச் செல்லும் பிரிவில் கொமர்ஷல் வங்கியின் புதிய கிளை வங்கி,  செயற்பாடுகளுக்கான உதவி பொது முகாமையாளர் பாலித்த பெரேராவினால் திறந்து வைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X