Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூன் 19 , பி.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
AIA இன்ஷுரன்ஸின் அடுத்த தலைமுறைக்கான பரிபூரணமான AIA ஹெல்த் புரடெக்டர் தற்போது இரண்டு புதிய சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றது.
இலங்கையில் மருத்துவப் பணவீக்கம் 7% இற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதால் அனைத்துச் சுகாதாரப் பராமரிப்புச் செலவினங்களினதும் பெரியளவிலான பகுதியானது செலவு கூடியதொன்றாகவே இருந்து கொண்டிருக்கிறது.
எனினும் இக்காரணத்தால் சிறந்த சுகாதாரக் காப்புறுதித் திட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருதாமல் அதை ஒதுக்கிவிட முடியாது.
இதனாலேயே AIA Health Protector, இரண்டு புதிய சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இது இலங்கையில் காணப்படுகின்ற பரிபூரணமான சுகாதாரக் காப்புறுதித் திட்டமொன்றாகக் காணப்படுகிறது.
நீங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது, பணத்தைப் பற்றிய எந்தவொரு கவலையுமின்றி உலகத்தின் எந்தவோர் இடத்திலும் (ஐக்கிய அமெரிக்கா, கனடா தவிர்ந்த) சிகிச்சையைப் பெறுவதற்கு AIA இனுடைய உலகளாவிய பணமற்ற வைத்தியசாலை அனுமதி உங்களை அனுமதிக்கின்றது.
இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் AIA இனுடைய பணமற்ற வைத்தியசாலை அனுமதி அட்டையை அவ்வைத்தியசாலையில் சமர்ப்பிக்க வேண்டியது மட்டுமேயாகும். இதன் பின்னர் மற்றைய விடயங்களை AIA பார்த்துக் கொள்ளும். AIA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி பங்கச் பெனர்ஜி கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர் ஒருவரின் கண்ணோட்டத்தில், யாராவது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, திறந்த இதய அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டால், அறுவைச் சிகிச்சைக்கு முன்னதாக, இதற்கு வேறு மாற்று வழிகள் உள்ளனவா என விளங்கிக் கொள்வதற்கு, மிகச்சிறந்த மற்றுமொரு விசேட அறுவைச்சிகிச்சை நிபுணரிடமிருந்து இரண்டாவது ஆலோசனை ஒன்றைப் பெறுவதற்கே அவர் நிச்சயம் விரும்புவார். AIA இன் இரண்டாம் வைத்திய ஆலோசனைச் சிறப்பம்சமானது உடலுறுப்பு மாற்றம், இதயம் தொடர்பான நோய்கள், புற்றுநோய்கள் போன்ற மிகவும் தீவிரமான நோய் நிலைமைகளுக்குச் சிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்கு முன்னராக, நன்கு தகவலறிந்து தீர்மானங்களை மேற்கொள்வதற்கான சௌகரியத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. முற்றுமுழுதாக ரூபாய் 20 மில்லியன் வரை தாராளமான வைத்தியசாலைச் செலவுக் காப்பீட்டை உள்ளடக்குகிறது” என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago