2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பத்து வருட பூர்த்தியில் 4rever

Gavitha   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

4rever Skin Naturals (FSN) இலங்கையில் தனது 10ஆவது வருட பூர்த்தியை இவ்வாண்டில் கொண்டாடுகின்றது. இந்தக் கொண்டாட்டங்களின் அங்கமாக, அநுராதபுரம் மற்றும் நாடு முழுவதிலும் வெவ்வேறு பகுதிகளில் சமய வழிபாடுகளில் 4rever ஈடுபட்டிருந்தது.  

2006ஆம் ஆண்டு, முன்னணி கூந்தல் மற்றும் அழகியல் நிபுணரான சாந்தனி பண்டாரவினால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த நிறுவனம், கடந்த பத்து ஆண்டுகளில் நுகேகொட பகுதியில் சிறியளவில் பொருட்களை உற்பத்தி செய்வதிலிருந்து பல்லேகல பகுதியில் நவீன வசதிகள் படைத்த உற்பத்தி நிலையத்துக்கு உற்பத்தி செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளது. சாந்தனி பண்டார பாரம்பரிய ஆயுர்வேத முறைகளை ஊக்குவிப்பதுடன், தகைமை வாய்ந்த அழகியல் சிகிச்சை நிபுணராகவும் அமைந்துள்ளார்.  

4rever Skin Naturals நிறுவனத்தின் முன்னணி வர்த்தக நாமமாக 4rever  அமைந்துள்ளதுடன், நூறு சதவீதம் இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் அழகியல் சாதனப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமத்தினால், 70க்கும் அதிகமான தயாரிப்புகள் காணப்படுகின்றன. இவை பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை முறைகளை பின்பற்றி தயாரிக்கப்படுவதுடன், பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் செயற்பாடுகளை நவீன வசதிகள் கொண்ட ஆய்வுகள் மற்றும் உற்பத்தி பகுதிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. 4rever  தயாரிப்புகளில் creams, cleansers, facewash, toners அடங்கியுள்ளதுடன், பொடி கெயார் தெரிவுகளில், பொடி வொஷ் மற்றும் லோஷன் ஆகியன அடங்கியுள்ளன. கூந்தல் பராமரிப்பு தெரிவுகளையும், குழந்தைகள் பராமரிப்புத் தெரிவுகளையும் 4rever கொண்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 4rever இல் காணப்படும் இயற்கை மூலப்பொருட்கள் உள்நாட்டிலிருந்து பெறப்பட்டவை என்பதுடன், அவை சான்றளிக்கப்பட்ட வாசனைத்திரவிய தோட்டங்கள் மற்றும் வளர்ப்பாளர்களிடமிருந்து பெறப்படுகின்றன.  

“கடந்த பத்து ஆண்டுகளில் நாம் சிறந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளோம். எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பானச் செயற்பாடுகளால் இது சாத்தியமாயிற்று, அதனூடாக தரம் வாய்ந்த அழகியல் பராமரிப்பு தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நுகர்வோர் வர்த்தக நாமங்களுக்கு தம்மை பழக்கப்படுத்தியுள்ளனர். இதற்கு நம்பிக்கை பிரதான காரணியாகும். அழகியல் பராமரிப்பு பொருட்களில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X