2026 மே 06, புதன்கிழமை

பந்தயக் காரின் சாதனையைக் கொண்டாடும் DIMO

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

Diesel & Motor Engineering PLC (DIMO) நிறுவனத்தின் ஆதரவுடன், மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மாணவர்களால் வடிவமைப்புச் செய்யப்பட்ட D-Mora P1 என்ற பந்தயக் கார், உலகில் இடம்பெற்று வருகின்ற மிகப் பாரிய மோட்டார் விளையாட்டுப் போட்டியான 'Formula Student 2016' நிகழ்வில் 3 விருதுகளை வென்றிருந்தது.

Formula Student 2016 போட்டியானது அண்மையில் ஐக்கிய இராச்சியத்திலுள்ள Silverstone Circuit பந்தயத் திடலில் இடம்பெற்றதுடன், பெருமதிப்புமிக்க இந்த நிகழ்வில் இலங்கையிலிருந்து முதற்தடவையாக இந்த அணி பங்குபற்றியிருந்தது. இப்போட்டியில் 30 நாடுகளிலிருந்து, 130 இற்கும் மேற்பட்ட அணிகள் போட்டியிட்டிருந்தன.

இயந்திரவியல் பொறியியல் கற்கை நிலையத்தால் ஏற்பாடு செய்யப்படுகின்ற, Formula Student போட்டியானது ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான கல்விசார் மோட்டார் விளையாட்டுப் போட்டியாக அமைந்துள்ளதுடன், தொழிற்துறை மற்றும் பிரபல பொறியியலாளர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது.

உலகெங்கிலுமுள்ள பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் நிலையான மற்றும் வலுவான நிகழ்வுகளில் போட்டியிடுவதற்கு, ஒரு வருடத்தில் தனி ஆசனத்தைக் கொண்ட பந்தயக் கார் ஒன்றை வடிவமைத்து, கட்டியெழுப்புமாறு சவால் விடுவதுடன், பந்தயக் காரின் சோதனை ஓட்டங்கள் மற்றும் தொழிற்படுதிறனை தெளிவாக விளங்கி, அவற்றை வெளிக்காண்பிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

 Formula Studen போட்டியில் பங்குபற்றிய பெருமளவான முன்னாள் மாணவர்கள்  Formula 1 போட்டி மட்டத்துக்கு செல்லுமளவிற்கு தமது திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான முன்னாள் போட்டியாளர்கள் உலகிலுள்ள மிகப் பாரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். எதிர்காலத்துக்கு உகந்த கார்களை வடிவமைத்து, வெளிக்கொண்டு வரும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்திலிருந்து கலந்துகொண்ட SHARK அணிக்கு முற்றுமுழுதான அணுசரனையை DIMO வழங்கியதுடன், ஹர்ஷன கலஷ அவர்களின் தலைமையின் கீழ் அணியில் 18 பேர் இடம்பெற்றிருந்தனர். '“Best Newcomer in Class 1 மற்றும் 'Dedication to Formula Student Award 'ஆகிய இரு அணி நிலை விருதுகளும், மிகத் திறமையாக வாகனத்தை ஓட்டும் ஆற்றலுக்காக இந்துருவ முனசிங்க அவர்கள் தனதாக்கிக்கொண்ட ' Top Individual Driver'  விருதுமாக மொத்தமாக 3 விருதுகளை இந்த அணி வென்றுள்ளது. வகுப்பு 1 மற்றும் 2 என இரு பிரிவுகளின் கீழ் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரிவு 2 ஆனது வடிவமைப்பு தொடர்பான விளக்க படைப்பாக்கங்கள் மற்றும் செலவு மதிப்பீடு தொடர்பில் கவனம் செலுத்தியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .