2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பரந்தன் கெமிக்கல்ஸ் நிறுவனத்தை மீள இயங்கச் செய்ய நடவடிக்கை

Gavitha   / 2016 செப்டெம்பர் 27 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரந்தன் பிரதேசத்தில் அமைந்துள்ள பரந்தன் கெமிக்கல் கம்பனியை அரச தனியார் பங்காண்மையின் மூலமாக மீண்டும் இயங்கச்செய்வதுக்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தொழிற்துறை மற்றும் வாணிபத்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்காக பிரேரணைகளைக் கோரியுள்ளதாகவும், இந்த வருட இறுதிக்குள் சேதமடைந்துள்ள பரந்தன் கெமிக்கல் கம்பனியின் கட்டடங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.  தொழிற்சாலையின் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுக்கச் செய்வதற்கு 525 மில்லியன் ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.  

பொருளாதார முகாமைத்துவத்துக்கான அமைச்சரவைக்குழு பரந்தன் கெமிக்கல் தொழிற்சாலையை மீளக்கட்டமைப்பது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பரந்தன் கெமிக்கல் 150 மில்லியன் ரூபாயை 2015 இல் இலாபமாக பதிவு செய்துள்ளதாகவும், இந்நிலையில் இதன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு திறைசேரியிலிருந்து நிதியை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை எனவும் பரந்தன் கெமிக்கல் கம்பனியின் தொழிற்சங்க அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பரந்தன் கெமிக்கல் கம்பனியை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X