2025 ஜூலை 26, சனிக்கிழமை

பவுண்டேசன் ஒஃப் குட்னஸ் அமைப்பிற்கு கூல் பிளானட் ஆதர

Gavitha   / 2017 மார்ச் 30 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூல் பிளானட் நிறுவனத்தின் மகளிருக்கான பிரத்தியேக வர்த்தகக் குறியீடான “அன்ட்ரியானா” (ANDRIANA), பவுண்டேசன் ஒஃப் குட்னஸ் (Foundation of Goodness) அமைப்பின் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் முகமாக அவ்வமைப்புடன் கைகோர்த்துள்ளது. முதற்கட்டமாக ரூ. 500,000 நிதி பொறுப்பேற்கப்பட்டதுடன், இவ்வருடத்தில் மேலும் பங்களிப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. 

“கூல் பிளானட்டின் “அன்ட்ரியானா” வர்த்தகக் குறியீடு மற்றும் பவுண்டேசன் ஒஃப் குட்னஸ் அமைப்பு ஆகியவற்றுக்கு இடையில் ஏற்பட்டுள்ள விலைமதிக்க முடியாத மற்றும் அறப்பணிகளுக்கான இந்தப் பங்காளித்துவமானது, பெருமளவிலான கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இப்பெறுமதியான காரியத்துக்காக  மேற்கொள்ளப்பட்டுள்ள இப் பங்களிப்பானது, மேற்படி அப்பாவி மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை வழங்குவதை மையமாகக் கொண்ட பெருமளவிலான செயற்றிட்டங்களுக்கும் அனுகூலம் அளிப்பதாக அமையும் என்று பவுண்டேசன் ஒஃப் குட்னஸ் அமைப்பின் ஸ்தாபகர் குசில் குணசேகர தெரிவித்தார். 

“மகளிருக்கான பிரத்தியேக வர்த்தகக் குறியீடாக திகழும் “அன்ட்ரியானா” ஊடாக அதிகளவிலான மக்களின் வாழ்க்கைக்கு வளமூட்டுகின்ற இதுபோன்றதொரு மனப்பான்மை கொண்ட முன்முயற்சியில் ஒரு அங்கமாகத் திகழ்வதையிட்டு கூல் பிளானட் நிறுவனம் பெருமிதம் அடைகின்றது. இந்தத் தயவானது ஒரு சிற்றலை தாக்கத்தை ஏற்படுத்துகின்ற அதேநேரத்தில் கூள் பிளானட் மற்றும் பவுண்டேசன் ஒஃப் குட்னஸ் ஆகியவற்றுக்கு இடையில் உருவாகியுள்ள இந்த நீண்டகால உறவானது இதைவிட பாரிய அலைகளை உருவாக்குவதற்கான உத்தரவாதத்தையும் அளிக்கின்றது” என்று கூல் பிளானட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான றிஸ்வி தாஹா தெரிவித்தார்.  

வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்துக்கு உரிய பெறுமதியை வழங்கும் விதத்திலமைந்த சில்லறை ஆடை விற்பனையை மேற்கொள்வதன் மூலம், முக்கியத்துவம் வாய்ந்த சந்தைப் பங்கை கூல் பிளானட் நிறுவனம் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. எப்போதும் மாற்றமடைந்து கொண்டிருக்கும் நவநாகரிக போக்குகளுக்கு அமைவாக, ஆடைகள் மற்றும் அணிகலன்கள் தொடர்பிலான முதன்மைத் தெரிவாக கூல் பிளானட் வளர்ந்து வருகின்றது. மகளிருக்கான அதனது “அன்ட்ரியானா” போன்ற உலகத் தரம்வாய்ந்த வர்த்தகக் குறியீடுகள், விரைவாக புரிந்துக் கொள்ளும் ஆற்றலுள்ள நவீனபோக்கை விரும்பும் மகளிரின் உணர்வை கவர்ந்திழுக்கக் கூடிய ஆடைத் தெரிவுகளை வழங்குகின்றது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X