2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பவர் Toastmasters கழகம் ஸ்தாபிப்பு

S.Sekar   / 2022 மே 06 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது ஊழியர்கள் மத்தியில் சிறந்த தொடர்பாடல் திறன் மற்றும் தலைமைத்துவ ஆற்றல்களை கட்டியெழுப்பும் நோக்கில், பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமமான ஏ. பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட், Baurs Toastmasters Club (BTC) எனும் கழகத்தை நிறுவியிருந்ததுடன், அதன் நிறைவேற்றுக் குழுவின் ஸ்தாபிப்பு வைபவத்தையும் முன்னெடுத்திருந்தது.

கிங்ஸ்பரி ஹோட்டலில் அண்மையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பவர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொல்ஃவ் ப்லாசர் கலந்து கொண்டதுடன், மாவட்ட பணிப்பாளர் DTM ஸ்ரீயந்தி சல்காடோ சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பவர் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், The Colombo Toastmasters Club இன் தலைவர் DTM சியாமலி ஜயசேகர அடங்கலாக District 82 Toastmasters International அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ரொல்ஃப் ப்லாசர் கருத்துத் தெரிவிக்கையில், “Baurs Toastmasters Club ஸ்தாபிப்பில் கலந்து கொள்ள முடிந்தமை உண்மையில் மிகவும் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. எமது பல நிறுவன அங்கத்தவர்களுக்கு வினைத்திறன் வாய்ந்த தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவம் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு இது உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், முக்கியமாக தாம் சேவையாற்றும் சமூகங்களுக்கு தொடர்ந்தும் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

Toastmasters International ஐப் பொறுத்தமட்டில் பவர் நிறுவனத்துக்கு புதிய விடயமல்ல. கடந்த காலங்களில் பல பிரிவுகளில் பல்வேறு பேச்சுத்திறன் விருத்தி நிகழ்வுகளை முன்னெடுத்திருந்ததுடன், இதற்கு Colombo Toastmasters Club இன் வழிகாட்டல்களையும் பெற்றிருந்தது.

இந்த நிகழ்வுகளினூடாக நல்லதொரு தாக்கம் ஏற்படுத்தப்பட்டிருந்தது என்பதில் எவ்விதமான சந்தேகங்களும் இல்லை என்பதுடன், பல ஊழியர்களுக்கு திறன்களையும் தன்னம்பிக்கையையும் பெற்றுக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. அதனூடாக, பொதுப் பேச்சுத்திறன் தொடர்பான தமது ஆற்றலை அவர்களால் மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருந்ததுடன், தொடர்பாடல் பழக்க வழக்கங்கள், உரைகள், உடல் அசைவுகள், கவனமாக செவிமடுத்தல் மற்றும் மதிப்பாய்வு செய்தல் போன்ற திறன்களை மேம்படுத்திக் கொள்ள உதவியிருந்தன. இந்த பயிலல் அனுபவம் என்பது அதிகளவு ஈடுபாட்டுத் திறனை பேணுவதாக அமைந்திருப்பதுடன், தொடர்ச்சியான வழிகாட்டல் மற்றும் ஆக்கபூர்வமான கருத்துரைப்புகளை அனுபவம் வாய்ந்த Toastmastersகளிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் ஏதுவாக அமைந்திருந்தது.

BTC இன் அங்கத்தவர்களை உள்வாங்குவதை Communication Chair of District 82 DTM சர்மா மகாலிங்கம் மற்றும் பிரதேச பணிப்பாளர் Toastmaster வினோதினி துர்காபக்ஷி ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.

Toastmasters இல் EXCO நியமனங்களில் தலைவர் ரசிக அமரசிங்க (முகாமையாளர் – நிர்வாகம்), உப தலைவர் கல்வி ஹர்ஷி விஜேந்திர (சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி, பயிலல் மற்றும் விருத்தி), உப தலைவர் பொது உறவுகள் மதுஷான் அல்விஸ் (தயாரிப்பு முகாமையாளர், Roche Biotech ஐ பிரதிநிதித்துவப்படுத்தி பவர் ஹெல்த்கெயார் பிரிவு), உப தலைவர் அங்கத்துவம் டாஷியா விஜேயகுலசூரிய (நிறைவேற்று அலுவலக ஒழுங்கிணைப்பாளர்), செயலாளர் சத்துரினி காரியவசம் (பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்/விவசாய பணிப்பாளரின் பிரத்தியேக உதவியாளர்), பொருளாளர் தில்ஷான் வருசமன (உதவி கணக்காளர்) மற்றும் சார்ஜன்ட் காப்பாளர் தீபிகா ராமராஜ் (நிர்வாக நிறைவேற்று அதிகாரி) ஆகியோர் அடங்கியிருந்தனர்.

ஒரு வருட காலப்பகுதியில் 125 வருட கால முன்னேற்ற வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை கொண்டாடவுள்ள நிலையில், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு பவர் குடும்பத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்த நடவடிக்கை பிரதிபலிப்பாக அமைந்திருப்பதுடன், பரந்தளவு பணியிடத்தை கொண்டிருப்பது மாத்திரமன்றி, தனிநபர் வளர்ச்சி மற்றும் பிரத்தியேக விருத்தி ஆகியவற்றை ஊக்குவிக்கும் சூழலையும் ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X