Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 31 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட், தனது பிரதி முகாமைத்துவப் பணிப்பாளராக நிஷாந்த வீரசிங்கவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. சுகாதார பராமரிப்பு பிரிவின் பணிப்பாளராக இவர் தொடர்ந்தும் இயங்குவார்.
தமது புதிய நிலையில், நிறுவனத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு அவசியமான வழிகாட்டல்களை தமது பரந்த அனுபவம் மற்றும் மூலோபாய நோக்கை பிரயோகித்து வழங்குவார். பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் விவசாய பணிப்பாளராக பணியாற்றும் ஜானக குணசேகரவுடன் இவர் இணைந்து செயலாற்றுவார். பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்களாக வீரசிங்க மற்றும் குணசேகர ஆகியோர் பவர் நிறுவனத்தின் தலைமைத்துவத்தை மேலும் வலிமைப்படுத்துவர்.
பவர் நிறுவனத்தின் சுகாதார பராமரிப்பு பிரிவை இலங்கை சந்தையில் கீர்த்தி மிக்க, துரித முன்னேற்றத்துக்கு உட்படுத்தி, தொழிற்துறையின் முன்னணி மூன்று நாமங்களில் ஒன்றாக திகழச் செய்வதில் வீரசிங்க முக்கிய பங்காற்றியிருந்தார். மருந்துப் பொருட்கள், மருத்துவ சாதனங்கள், இனங்காணல்கள் மற்றும் போஷாக்கு ஆகிய பிரிவுகளில் பரந்தளவு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இந்தப் பிரிவு வழங்குகின்றது.
அவரின் தலைமைத்துவத்தின் கீழ், சர்வதேச ரீதியில் சுகாதார பராமரிப்புத் துறையில் புகழ்பெற்ற நாமங்களான GSK, Sanofi, J&J (specialty care), Takeda (vaccine), Covidien மற்றும் Fresenius Medical Care போன்றவற்றுடன் இணைந்து, இந்தப் பிரிவு பல்வேறு புத்தாக்கமான மற்றும் உயிர் காக்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வெற்றிகரமாக அறிமுகம் செய்திருந்தது. மேலும், இந்தப் பிரிவுக்கு பெருமைக்குரிய தர நியம சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.
1990 ஆம் ஆண்டு பவருடன் இணைந்து கொண்ட வீரசிங்க, மேற்பார்வையாளர், நிறைவேற்று அதிகாரி, முகாமையாளர், பிரதி பொது முகாமையாளர், மாற்று பணிப்பாளர் மற்றும் அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டில் சுகாதார பராமரிப்பு பிரிவின் பணிப்பாளர் ஆக உயர்ந்து, பின்பு இன்றைய நிலைக்கு படிப்படியாக உயர்வடைந்திருந்தார். சரக்கு கையாளல், விநியோக சங்கிலி முகாமைத்துவம், வணிக செயற்பாடுகள் மற்றும் பொதுத் துறைக்கு சந்தை அணுகல் போன்றவற்றில் ஈடுபாட்டைக் கொண்டிருந்தார். நிறுவனத்துடன் 34 வருடங்களுக்கு மேலாக கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன், இவரின் தலைமைத்துவம் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
சுகாதார பராமரிப்பு துறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியமை தொடர்பி்ல் வீரசிங்க தொடர்ந்து கருத்துகளை வெளிப்படுத்தி வருவதுடன், ஒழுக்கமான செயற்பாடுகள் தொடர்பிலும் அழைப்புவிடுத்த வண்ணமுள்ளார். மேலும், மாற்றமடைந்து செல்லும் வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான தேவை தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றார். சந்தை செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போன்றவற்றினால் தொழிற்துறையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்பதில் இவர் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார். கல்வி போன்ற புதிய மற்றும் பக்கபலமான துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, வியாபார பிரிவை பன்முகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இவர் வெளிப்படுத்தியுள்ளதுடன், அதனூடாக பிரதான வியாபாரத்துக்கு ஏற்படுத்தப்படக்கூடிய வாய்ப்புகள் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்.
University of Wales Trinity Saint David இன் இணைந்த கல்லூரியிடமிருந்து MBA பட்டத்தை வீரசிங்க பெற்றுள்ளதுடன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பொது முகாமைத்துவ நிறைவேற்று கல்வித் திட்டத்தையும் தொடர்ந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
30 Apr 2025
30 Apr 2025
30 Apr 2025