Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 12 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் அதிகளவு அச்சு இயந்திரங்களை விற்பனை செய்யும் பாதியா டிரேடிங் கம்பனி பிரைவட் லிமிட்டெட்டுக்கு, ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருதுகள் 2018 இல், தொழிற்றுறை மற்றும் வணிக தயாரிப்புகள் பிரிவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதை, நிறுவனத்தின் ஸ்தாபகர் பாதிய உடுமலகல பெற்றுக் கொண்டார்.
கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வை, என்டர்பிரைஸ் ஏசியா ஏற்பாடு செய்திருந்தது. தொழில்முயற்சியாண்மை சிறப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கௌரவிக்கும் வகையில் பிராந்திய மட்டத்தில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் தொழிற்துறை மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
மலேசியா, இந்தோனேசியா, புருனெய், சிங்கப்பூர், ஹொங்கொங், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு தொடராக முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், சுற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ விவகாரங்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க, என்டர்பிரைஸ் ஏசியாவின் தலைவர் டதோ வில்லியம் என்ஜி மற்றும் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் தினேஷ் வீரக்கொடி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
1993இல் நிறுவப்பட்ட பாதியா குரூப், பரிபூரண அச்சிடல் தீர்வுகளை இலங்கைக்கு வழங்கி வருகிறது. சந்தை வளர்ச்சி, வாய்ப்புகளை இனங்கண்டு, தனது செயற்பாடுகளை பன்முகப்படுத்தி அச்சிடலுக்கு அப்பால் சென்று, பொதியிடல், சுகாதார பராமரிப்பு, சரக்கு கையாளல், விருந்தோம்பல், சுற்றுலாத்துறை, ரியல் எஸ்டேட் அபிவிருத்தி போன்றவற்றிலும் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளது.
இந்த குழுமத்தில் கொமர்ஷல் பிரின்டிங் அன்ட் பகேஜிங் லிமிட்டெட், பாதியா ட்ரான்ஸ்போர்டர்ஸ் லிமிட்டெட், பாதியா என்ஜினியரிங் அன்ட் மெனுபெக்ஷரிங் லிமிட்டெட், மெட்ரோ ஹெல்த் கெயார் லிமிட்டெட், சிபிபி டிஜிட்டல் லிமிட்டெட் போன்றன அடங்கியுள்ளன.
இந்த பெருமைக்குரிய விருதை வெற்றியீட்டியமை தொடர்பில் பாதியா குரூப் ஸ்தாபகரும் முகாமைத்துவ பணிப்பாளருமான பாதிய உடுமலகல கருத்துத் தெரிவிக்கையில், “ஆசிய பசுபிக் தொழில்முயற்சியாண்மை 2018 விருதுகள் வழங்கலில் தொழிற்துறை, வணிக தயாரிப்புகள் பிரிவில் எனக்கு விருது வழங்கப்பட்டுள்ளதையிட்டு மிகவும் பெருமையடைகிறேன். இலங்கையின் அச்சிடல் துறையின் வளர்ச்சிக்கும், தென் கிழக்காசிய பிராந்தியத்தில் அச்சிடல் மய்யமாக இலங்கையை ஊக்குவிக்கின்றமைக்காகவும் என்னைக் கௌரவித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. எமது சகல பங்காளர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரால் பகிர்ந்து கொள்ளப்படும் விருதாக இது அமைந்துள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
22 minute ago
25 minute ago