Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 21 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எல். அதிரன்
மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியால் மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியின் சுற்றுமதிலுக்கு வர்ணம் பூசப்பட்டதுடன், அங்கு கல்விபயிலும் 1,400 மாணவிகளின் நன்மை கருதி, வங்கியின் பாடசாலைக்கிளை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு நகரில் நடை பவனி ஒன்றும் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் ஏ.எச்.எம்.ஜயசிங்க, பிராந்தியப் பொது முகாமையாளர் ஆர்.என்.ஆர்.ரந்தெனிய, மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் வை.பி.அஸ்ரப், கிழக்கு மாகாண சந்தைப்படுத்தல் முகாமையாளர் கே.சத்தியநாதன், கிளை முகாமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் வியாபார மேம்படுத்தல் திட்டத்தின் கீழ், சந்தைப்பிரிவை விரிவுபடுத்துதல், நகரவலம் மேற்கொள்ளுதல், பொது இடங்களைத் தூய்மைப்படுத்துதல் என்ற அடிப்படையில் இவ்வேலைத்திட்டங்கள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வங்கிகளுக்கு வியாபார நோக்கம் மாத்திரமல்ல; சமூகப் பொறுப்பும் உள்ளன என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் போது, மாணவிகளுக்கு வங்கிக்கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், வங்கியின் சின்னமான வலம்புரிச் சங்கு வடிவிலான உண்டியல்களும் வழங்கப்பட்டன.
2011ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி மட்டக்களப்பில் பணிகளை ஆரம்பித்த பிரதேச அபிவிருத்தி வங்கி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களின் வருமான மேம்பாட்டுக்கான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
பிரதேச அபிவிருத்தி வங்கியானது மட்டக்களப்பு நகரக் கிளை உட்பட, மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு நகரம், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை ஆகிய ஏழு கிளைகளைக் கொண்டு, கடந்த ஏழு வருடங்களாகப் பணியாற்றி வருகிறது.
வாடிக்கையாளர்களது நலன் கருதிப் பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு நகரக் கிளையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தானியங்கி பணம் பெறும் இயந்திரம் (ஏ.ரி.எம்.) திறந்து வைக்கப்பட்டது.
இந்த ஏ.ரி.எம் இயந்திரம் பிரதேச அபிவிருத்தி வங்கிக் கிளைகளில் கிழக்கின் முதலாவதும் இலங்கையில் 11ஆவதும் ஆகும்.
30 minute ago
56 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
56 minute ago
1 hours ago
5 hours ago