Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச சந்தையில் புதிய iPhone தெரிவுகளை Apple அறிமுகம் செய்ததை தொடர்ந்து, “எதிர்காலத்தின் ஸ்மார்ட் அலைபேசியாக” iPhone 8, iPhone 8 Plus, Apple Watch Series 3 மற்றும் 4k கொண்ட Apple TV அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
புதிய iPhoneஉற்பத்தி அணிவகுப்பிலுள்ள அதி நவீன சிறப்பம்சங்கள் உலகளாவிய அனைத்து வாடிக்கையாளர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்பதே உறுதியான நம்பிக்கையாகும். மேலும், புத்தம் புதிய iPhone X இல் உள்ள Face Rghecognition சிறப்பம்சம் மிக முக்கியமாகும். இதை பயன்படுத்துபவர்களின் முகத்திலுள்ள 30,000 வரையான முப்பரிமாண வடிவ இன்பாரேட் ஊடாக உங்களை அடையாளம் காணுவதோடு உங்கள் iPhone யை அன்லொக் செய்வதற்கான தொழில்நுட்பமும் இதுவாகும்.
iPhone X மிக விரைவில் இலங்கையர்களின் கரங்களில் கிடைக்கும். இதன் முகப்பு முழுவதும் திரையாகும். இதில் ஹோம் பட்டன் இல்லாத காரணத்தினால் மற்றும் புத்தம் புதிய ஸ்லீம் வடிவத்தினால் இது கவர்ந்திழுக்கும் தோற்றத்தைக் கொண்டுள்ளது. அதேபோல் இதன் 5.8 Edge to Edge OLED சுப்பர் ரெடினா டிஸ்பிளே,TrueDepth கெகரா, Animoji, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் Neural Engin உடன் A11 பயோனிக் சிப் இதில் உள்ளது. iPhone X இல் 12 மெகாபிக்ஸல் பின்புற கெமரா உள்ளதோடு முந்தையதை விட மிகச்சிறந்த அப்பச்சரில் ஆப்டிகல் இமெஜ் ஸ்டெபிலைஸருடன் இருள் சூழ்ந்த இடத்திலும் கூட மிகத்தெளிவான புகைப்படங்களை பெற்றுத்தரும்.
புதிய கிளாஸ் மற்றும் அலுமினியம் நிறைவைக் கொண்டுள்ள iPhone 8 மற்றும் iPhone 8 Plus விற்பனைச் சந்தைகளில் அறிமுகம் செய்த நொடி முதல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கண்ணாடியினால் ஆன பின்புறம் நீடித்துழைக்கும் தன்மைக் கொண்டது. மேலும், வயர்லெஸ் சார்ஜருக்கு துணையாக அமையும் A11 பயோனிக் சிப், M11 புரோசோசர், 4’7 மற்றும் 5’5 அங்குல ரெடினா ட்ரூ டோர்ன் டிஸ்பிளே மற்றும் 12 மெகா பிக்சல் மேம்படுத்தப்பட்ட கெமரா சென்சர் இங்கு காணமுடியும். மேம்படுத்தப்பட்ட கலர் பில்டர், மிகச்சிறந்த பிக்சல் மற்றும் ஒப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மூலம் முன் எப்போதும் இல்லாத தரமான புகைப்படங்கள் மற்றும் தரமான வீடியோக்கள் பெற்றுக்கொள்ள முடியும். iPhone 8 Plus மற்றும் Portrait Lighting Mode இது சில்வர், ஸ்பிரே க்ரே மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய கோல்ட் போன்ற வர்ணங்களில் கிளாஸ் நிறைவுடன் பெற்றுக்கொள்ள முடியும். தூசு மற்றும் நீரில் பாதுகாப்பான முறையில் இந்த புதிய உற்பத்திகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago