2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புதிய அந்தனீஸ் ஃபாம்ஸ் ஏற்றுமதி தந்திரோபாயத்தை முன்னெடுப்பு

S.Sekar   / 2021 டிசெம்பர் 20 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியு அந்தனீஸ் ஃபாம்ஸ் (பிரைவட்) லிமிடெட், நாட்டின் முன்னணி இறைச்சி ஏற்றுமதியாளராக தன்னை நிலைநிறுத்தும் செயற்பாடுகளை வலிமைப்படுத்தும் தந்திரோபாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அண்மையில் அறிவித்துள்ளது.

தற்போது காணப்படும் தொற்றுப் பரவலுடனான சூழலில் எழுந்துள்ள பல்வேறு சவால்களுக்கு மத்தியில், நிறுவனம் வெற்றிகரமாக மீண்டெழுந்து, பிரதான சர்வதேச சந்தைகளுடன் உறவுகளை கட்டியெழுப்பியுள்ளதுடன், அதனூடாக நாட்டினுள் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரவும், உள்நாட்டு பண்ணைத் துறையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்துவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது. நியு அந்தனீஸ் ஃபாம்ஸ் ஏற்கனவே 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வருமானமாக ஈட்டியுள்ளதுடன், 2021/22 காலப்பகுதியில் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெறக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றது.

நியு அந்தனீஸ் ஃபாம்ஸ் இரு சொந்த வர்த்தக நாமங்களான Anthoney's மற்றும் NoBiotic ஆகிய நாமங்களில் கோழி இறைச்சியை சந்தைப்படுத்துகின்றது. தனது செயற்பாடுகளில் பாதுகாப்பு, தரம் மற்றும் சூழலுக்கு நட்பான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவமளித்து, தனது பண்ணை விநியோகத் தொடரினூடாக, தயாரிப்புகளைப் பெற்று அவற்றை நிலைபேறான வகையில் பொதியிட்டு, நாட்டின் முன்னணி சிற்றுண்டித் தொடர்கள் மற்றும் உணவகங்கள், சுப்பர் மார்கெட்கள், ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் பல விற்பனையகங்களுக்கு விநியோகிக்கின்றது.

நியு அந்தனீஸ் ஃபாம்ஸ் தவிசாளரும் இணை ஸ்தாபகருமான எமில் ஸ்டான்லி கருத்துத் தெரிவிக்கையில், “உள்நாட்டில் இறைச்சியை விநியோகிப்பதில் முன்னோடிகளாகத் திகழும் நாம், எதிர்வரும் காலப்பகுதியில் பிராந்தியத்தில் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் எமது ஏற்றுமதி தந்திரோபாயத்தை முன்னெடுப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எமது நவீன வசதிகள் படைத்த ஏற்றுமதி வசதிகளை விஸ்தரிப்பதில் நிறுவனம் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளதுடன், அதனூடாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவும் கோழி இறைச்சிக்கான தேவையை நிவர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. அத்துடன், சூழலுக்கு நட்பான மற்றும் நிலைபேறான வழிமுறையை பின்பற்றி முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளையும் நிறுவனம் பதிவு செய்துள்ளது.” என்றார்.

100 சதவீதம் இயற்கை செயன்முறைகளைப் பயன்படுத்தி கோழி இறைச்சி தயாரிக்கப்படுவதுடன், எவ்விதமான ஹோர்மோன் சேர்க்கைகளுமின்றி அவை தயாரிக்கப்படுவதுடன், அதனூடாக நுகர்வோருக்கு உயர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், அவர்கள் மத்தியில் நுகர்வுக்கான நம்பிக்கையையும் வென்றுள்ளது. அத்துடன் அவசியமான அமினோ அமிலங்களை இறைச்சியில் கொண்டிருப்பதுடன், சுவை, நறுமணம் மற்றும் பசுமையையும் உறுதி செய்துள்ளது.

நியு அந்தனீஸ் பாம்ஸ் நிறுவனத்துக்கு நிலைபேறான கோழி இறைச்சி உற்பத்தி என்பது புதிய நாமமல்ல. எவ்வேளையிலும் கடுமையான, உயிரியல் ரீதியில் பாதுகாப்பான பண்ணைச் செயன்முறைகளை பின்பற்றுவதுடன், அமெரிக்காவின், தேசிய கோழி இறைச்சி சம்மேளனத்தின் விலங்கு நலன்புரி நியமங்களைப் பின்பற்றி செயலாற்றுகின்றது. GMP, HACCP மற்றும் ISO 22000 சான்றளிக்கப்பட்ட நிறுவனம் என்பதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச ஹலால் சான்றிதழ்களையும் கொண்டுள்ளது. இலங்கையில் காணப்படும் ஒரே GHC உறுதி செய்யப்பட்ட கோழி இறைச்சி உற்பத்தியாளராகவும் திகழ்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X