2025 ஜூலை 17, வியாழக்கிழமை

புதிய முகவரியில் செலான் வங்கியின் தலவாக்கலை கிளை

Editorial   / 2019 ஜனவரி 01 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி தனது தலவாக்கலை கிளையை புதிய முகவரிக்கு இடம்மாற்றியிருந்தது.

பெருமளவு வாகனத் தரிப்பிட வசதிகளைக் கொண்ட பகுதியில் இந்தக் கிளை தற்போது அமைந்துள்ளது.  இல. 43/A, கொத்மலை வீதி, தலவாக்கலை எனும் முகவரியில் அமைந்துள்ள இந்தக் கிளை, மு.ப. 9 மணி முதல் பி.ப. 4 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரை திறந்திருக்கும். 

பிரதேசத்தைச் சேர்ந்த தனிநபர்கள், வளர்ந்து வரும் தொழில் முயற்சியாளர்கள், வியாபாரிகளுக்குப் பிரத்தியேகமான நிதிச் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் அவர்களின் வங்கித் தேவைகளைச் சிக்கலில்லாத வகையில் மேற்கொள்வதற்கும் உதவியாக அமைந்துள்ளது.  

நவீன டிஜிட்டல், முன் அலுவலக சேவைகளை கொண்டுள்ளதுடன், செலான் வங்கியின் தலவாக்கலை வங்கிக்கிளையினூடாக வாடிக்கையாளர்களின் வாழ்க்கைகளை வளமூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாகப் பெருமளவான வாடிக்கையாளர் வங்கியியல் சேவைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் நடைமுறைக் கணக்கு, சேமிப்புக் கணக்குகள், சிறுவர் சேமிப்புக் கணக்குகள், நிலையான வைப்புகள், வீடமைப்புக் கடன்கள், NRFC/RFC கணக்குகள், லீசிங் வசதிகள், கடன், பற்று அட்டைகள், மொபைல் வங்கியியல் சேவைகள் போன்றன அடங்கியுள்ளன. 

கடந்த பல ஆண்டுகளாக, நுண் பொருளாதார பிரிவுகளை வலுவூட்டுவதற்கு செலான் வங்கியால் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, பணப் பாய்ச்சல்களை நிர்வகிப்பதற்கான பயிற்சிப் பட்டறைகள், நிதி அறிவு, சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கான மீளறிவூட்டல் நடவடிக்கைகள் அடங்கியிருந்தன.  

செலான் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற வங்கியியல் அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் செயலாற்றி வருகிறது. குறிப்பாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம், புத்தாக்கமான தீர்வுகள், சேவைகள் ஆகியவற்றை வங்கியியல் துறையில் வழங்குகிறது. 

நாடு முழுவதிலும் தனது கிளை வலையமைப்பை வங்கி 170 கிளைகளாக விஸ்தரித்துள்ளதுடன், 208க்கும் அதிகமான ATMகளையும் தன்வசம் கொண்டுள்ளது. செலான் வங்கி தன்வசம் வளர்ந்து வரும் சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள், சில்லறை, கூட்டாண்மை வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதுடன், சமூக வலைத்தளங்களில் சிறப்பாகச் செயலாற்றுகின்றமைக்காக உலகளாவிய ரீதியில் கௌரவிப்பைப் பெற்றுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X