S.Sekar / 2021 டிசெம்பர் 31 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி தனது மன்னார் கிளையை அதிகளவு இடவசதி படைத்த புதிய மனையிடத்திற்கு சமீபத்தில் இடம்மாறியது. புதிய கிளை, இல. 181, தலைமன்னார் வீதி, மன்னார் எனும் முகவரியில் அமைந்துள்ளது.

புதிய கிளையின் அமைவிடம் வாடிக்கையாளர்களுக்கு இலகுவான முறையில் கிளையையும் ATM சேவைகளையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது. வழமையான வேலை நேரங்களில் வங்கிக் கிளை செயலில் இருக்கும் என்பதுடன், அதிகளவு இடவசதி படைத்த புதிய கிளை, வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு பிரத்தியேகமான சேவைகளை வழங்கும் வகையில் அமைந்திருப்பதுடன், உயர்ந்த சௌகரியத்தை உறுதி செய்யும்.
தனது நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுக்கையில், சுகாதார அதிகாரத் தரப்பினரால் வழங்கப்படும் சகல வழிகாட்டல்களையும் செலான் வங்கி பின்பற்றுவதுடன், வாடிக்கையாளர்களையும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு ஊக்குவிக்கின்றது. தமது தினசரி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு செலான் வங்கியின் டிஜிட்டல் கட்டமைப்புகளை பயன்படுத்துமாறு வங்கி அழைப்பு விடுத்துள்ளது.
அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான தயாரிப்புகள் மற்றும் வகுப்பில் சிறந்த சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உன்னத வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான தொலைநோக்குடன் செயல்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர, சில்லறை மற்றும் நிறுவனங்கள் என வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி, 172 கிளைகள் மற்றும் நாடு முழுவதும் பரந்துள்ள 70 பண வைப்பு இயந்திரங்கள், 86 காசோலை வைப்பு இயந்திரங்கள் மற்றும் 216 ATMகள் கொண்ட வலையமைப்புடன் அதன் கால்தடத்தை விரிவுபடுத்தியுள்ளது. பிற்ச் மதிப்பீடுகளால் செலான் வங்கி, தேசிய நீண்டகால மதிப்பீடு ‘A-(LKA)’ என்பதிலிருந்து ‘A(LKA)’ ஆக தரமுயர்த்தப்பட்டு, செயல்திறன் சிறப்பைக் கொண்ட நிதி ரீதியாக நிலையான அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பரன்சி குளோபல் நிறுவனத்தால் நிறுவன அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மைக்காக பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், செலான் வங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இது தற்போது S&P Dow Jones SL 20 சுட்டெண்ணின் அங்கமாகவும் அமைந்துள்ளது. இந்த சாதனைகள் செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.
6 minute ago
9 minute ago
27 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
27 minute ago
34 minute ago