2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புதிய விற்பனை ஊழியர்களின் முழுத் திறமையையும் வெளிக்கொணரும் PAC

Editorial   / 2018 மே 29 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

AIA இன்ஷுரன்ஸின் AIA பிரீமியர் ஏஜென்சி சேர்க்கிள் (PAC - AIA யின் முதன்மையான முகவர் நிறுவனக் குழு) பிராந்திய பிரதான நிறைவேற்று அதிகாரி பில் லிஸ்லி, பிரதான நிறைவேற்று அதிகாரி பங்கச் பெனர்ஜி, மற்றும் பிரதிப் பிரதான நிறைவேற்று அதிகாரி அல்லது பிரதான முகவர் நிறுவன அதிகாரி உபுல் விஜேசிங்க, ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. 

கொழும்பின் வர்த்தக மையத்தின் மத்தியில் உள்ள மிகவும் வசதியான ஆடம்பர அலுவலக வளாகத்திலேயே இந்த அலுவலகம் அமையப் பெற்றுள்ளது. PAC அலுவலகமானது, AIA இனுடைய புதிய உயர் செயற்திறனுடைய விற்பனை ஊழியர்களுக்கான இல்லமாகவே இருக்கும்.  

AIA இனுடைய PAC அலுவலகம் மில்லியன் டொலர் வட்ட மேசை (MDRT) அங்கத்துவத்தை எய்துவதற்காக முழுநேர முகவர் நிறுவன விற்பனை அணிகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டே திறக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் பெரும் எண்ணிக்கையான மிகவும் செல்வந்த வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்வதற்காகவும் தொழில் ரீதியான முழுநேர முகவர் நிறுவன அணியின் மேம்படுத்தலுக்காகவும், முன்னேற்றம் அடைந்த குழுவின் சாதனையுடன் உயர் செயற்திறனை மேலும் ஊக்குவிப்பதையே இது நோக்காகக் கொண்டுள்ளது.  

AIA யின் பிரதான முகவர் நிறுவன அதிகாரி அல்லது பிரதிப் பிரதான நிறைவேற்று அதிகாரி உபுல் விஜேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “புதிதாகத் தெரிவு செய்யப்படும் விற்பனை ஊழியர்களுக்கு, முழுமையாக டிஜிடல் மயப்படுத்தப்பட்ட, வயர்லஸ் (கம்பியற்ற) அமைப்பைக் கொண்ட, காகிதமற்ற விநியோக அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

இது உண்மையில் PAC முகவர்களுக்கான அர்ப்பணிப்பான பயிற்சி மையம் ஒன்றாகவே இருக்கும். AIA யினது PAC ஆனது, தற்போது இலங்கையில் இந்த வகையில் உள்ள ஒரே ஒரு ‘முழுநேர முகவர் நிறுவன’ எண்ணக்கருவாகவும் முன்னோடியாகவும் அமைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.   

AIA ஸ்ரீ லங்காவுக்கான பிரீமியர் ஏஜென்சி சேர்க்கிளின் தலைவர், சேர்மல் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், “MDRT என்பது ஆயுள் காப்புறுதி மற்றும் நிதியியல் சேவை வர்த்தகத்தின் அதிசிறந்த தரத்துக்காகவே சர்வதேச ரீதியாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

இதனுடைய அங்கத்தவர்கள் உயர் மட்ட உற்பத்தியை உருவாக்குவதற்கும், அதிஉயர்வான தொழில் ரீதியான அறிவையும் கண்டிப்பான நெறிமுறைசார் நடத்தையையும் மற்றும் மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவையை நிரூபிப்பதற்கும் வேண்டப்படுகின்றனர்.

குறிப்பிடும்படியாக, தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக இலங்கையிலிருந்து AIA ஸ்ரீ லங்கா அதிக எண்ணிக்கையான MDRT உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. எனினும், எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு மேலும் தரமான சேவையை வழங்குவதற்காக எங்களது விற்பனை ஊழியர்களின் தரச் சிறப்பை உறுதிப்படுத்துவதில் நாங்கள் இன்னும் அதிகமாகச் செயற்பட வேண்டும்.

நாங்கள் வாடிக்கையாளர்களை மையப்படுத்தியே எங்களுடைய முயற்சிகளைத் துரிதப்படுத்துவதனால், முகவர் நிறுவனத்தின் புதிய, மற்றும் தரமான சிறப்பை உருவாக்கும் இதுவும் எங்களுடைய பெருமுயற்சி ஒன்றாகும்” எனத் தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .