Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 25 , பி.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
Lyca Production இன் வெளியீடான ஷங்கரின் 2.0 திரைப்படம் பரிபூரண 3D காட்சியமைப்புடன், இந்தியத் திரைப்பட வரலாற்றில் இதுவரை செலவிடப்பட்டுள்ள மிக உயர்ந்த தொகையான 85 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை செலவிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. திரையிடப்படுவதற்கு முன்னதாக 120 கோடி ரூபாயை முன்பதிவுகளில் திரட்டியுள்ளது. இதனூடாக திரைக்கு வரமுன்னதாகவே கோடி ரூபாயை தாண்டிய முதலாவது தமிழ் திரைப்படமாகவும் அமைந்துள்ளது.
Lyca Productions மற்றும் இலங்கையின் EAP ஃபிலிம்ஸ் மற்றும் தியேட்டர்கள் இணைந்து இலங்கையின் திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் சிறந்த சினிமான அனுபவத்தை புத்தாக்கமான வகையில் வழங்க முன்வந்துள்ளன.
இலங்கையில் பிறந்த சுபாஸ்கரன் அல்லிராஜா, Lyca Productions இன் தலைவராக இயங்குகிறார். இவர் Lycatel மற்றும் Lycamobile குரூப் ஒஃவ் கம்பனிஸ் ஆகியவற்றின் ஸ்தாபகராகவும், தலைவராகவும் திகழ்கிறார். தொழில்முயற்சியாளராக தனது செயற்பாடுகளை ஆரம்பித்து 18 வருடங்களுக்கு அதிகமான அனுபவத்தைத் தொலைத்தொடர்பாடல் துறையில் கொண்டுள்ள சுபாஸ்கரன், தனது தலைமைத்துவம் மற்றும் தூர நோக்கு ஆகியவற்றினூடாக Lycatel ஐ சர்வதேச ரீதியில் 23 நாடுகளுக்கு விஸ்தரித்துள்ளார். ஐக்கிய இராஜ்ஜியம், நெதர்லாந்து, ஜேர்மனி, பெல்ஜியம், ஸ்பெய்ன், இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் செயற்பாடுகளை கொண்டுள்ளது. 10,000 க்கும் அதிகமான ஊழியர்களை தன்வசம் கொண்டுள்ளது.
தனது பிரத்தியேகமான மற்றும் புத்தாக்கமான திரைப்பட தயாரிப்புகள் மற்றும் பிரச்சார செயற்பாடுகள் போன்றவற்றுக்காக Lyca Productions சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுத் திகழ்கிறது. புதிய 3D காட்சி புத்தாக்க தொழில்நுட்பத்தினூடாக 3D கண்ணாடிகளின்றி 2.0 திரைப்படத்தை பார்வையாளர்கள் ரசித்து மகிழக்கூடிய வாய்ப்பை வழங்கியுள்ளதுடன், 100 அடி உயரமான பலூன் ஊடாக 2.0 திரைப்படத்தை உலகளாவிய ரீதியில் பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தது. சான் பிரான்சிஸ்கோ, லண்டன், துபாய், அவுஸ்திரேலியா மற்றும் லொஸ் ஏன்ஜல்ஸ் ஆகிய நாடுகளில் இந்த பலூன்கள் ஊடான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ‘The Dark Knight, Inception, Iron Man, Men in Black மற்றும் பல புகழ்பெற்ற ஹொலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய முன்னணி VFX நிறுவனங்கள், animatronics, designers மற்றும் தொழில்நுட்ப வியலாளர்களுடன் இணைந்து Lyca செயலாற்றியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .