S.Sekar / 2021 ஏப்ரல் 09 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் Safe and Resilient Migrant Workers (SRMW) என்ற பெயரில் பாதுகாப்பு மற்றும் நெகிழ்திறன் புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு சுவிஸ் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் கைகோர்த்துள்ளன.

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மிகவும் தேவைப்படுகின்ற திறன் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்பாட்டை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள SRMW, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், 18 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித்தொகையுடனான YouLead எனப்படும் இளைஞர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்வாண்மை செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக தொழில் வழிகாட்டல் மற்றும் தொழிற்பயிற்சி திறன்கள் மேம்பாடு தொடர்பில் லுழரடுநயன இன் பணிகள் மற்றும் பத்து ஆண்டுகளுக்கும் மேலான, பாதுகாப்பான புலம் பெயர்வு குறித்த அனுபவத்தைக் கொண்டுள்ள அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பிற்கான சுவிஸ் முகவர் அமைப்பு (SDC) ஆகியவற்றின் கூட்டிணைப்பானது புலம்பெயர் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நலனை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு உதவுவதுடன், இரு கூட்டாளர்களையும் மிகவும் பொருத்தமான இணைப்பாக மாற்றியுள்ளது.
மூன்று ஆண்டுகளாக சுவிட்ஸர்லாந்து வழங்கவுள்ள 1.5 மில்லியன் டொலர் பங்களிப்பானது பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழிகாட்டல் மற்றும் திறன்கள் பயிற்சியை வழங்க உதவுவதுடன், நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வெளிநாடுகளில் கற்றுக்கொண்ட தமது திறன்களை மதிப்பாய்வு செய்து, இலங்கையில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்வாண்மை வாய்ப்புக்களில் ஒன்றிணைக்க உதவும்.
SDC இனது ‘Safe Labour Migration Program Phase IV’ (பாதுகாப்புடனான தொழிலாளர் புலம்பெயர் நிகழ்ச்சித்திட்டம் கட்டம் 4) இன் அங்கமான SRMW அண்மையில் கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், சுவிட்ஸர்லாந்து தூதுவரான கலாநிதி டொமினிக் ஃபேர்க்ளர் மற்றும் அமெரிக்க தூதுவரான அலைனா டெப்ளிட்ஸ் ஆகியோர் இதில் கலந்து சிறப்பித்தனர்.
4 minute ago
15 minute ago
25 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
25 minute ago
42 minute ago