2025 மே 21, புதன்கிழமை

பெரெண்டினா மைக்றோ இன்வெஸ்ட்மன்ட்ஸ் கம்பனி (BMIC) அறிமுகம்

Editorial   / 2018 மே 14 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

    இலங்கையின் புதிய இலாப நோக்கமற்ற நுண்நிதி நிறுவனமாக, பெரெண்டினா மைக்றோ  இன்வெஸ்ட்மன்ட்ஸ் கம்பனி (BMIC) நிறுவப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பு மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அண்மையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிதி ராஜாங்க அமைச்சர் கௌரவ எரான் விக்ரமரத்ன இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.     

மத்திய வங்கியின் துணை ஆளுநர் திரு. சி.ஜே.பி சிறிவர்தன சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டார். இந்நிகழ்வின் பிரதம உரையை கௌரவ பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் திரு. சரித ரத்வத்தே மேற்கொண்டிருந்தார்.

மேலும், திருமதி. ஜோஆன் டோர்னேவார்ட் - இலங்கைக்கான நெதர்லாந்து நாட்டின் தூதுவர், திரு. ஜோஸ் வான் அக்லென் - தலைவர் பெரெண்டினா ஸ்ரிச்ரிங், நெதர்லாந்தின் பெரெண்டினா ஸ்ரிச்ரிங் பணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் கலந்து சிறப்பித்தனர். இலங்கை BMIC இன் ஸ்தாபகராக பெரெண்டினா ஸ்ரிச்ரிங் திகழ்கின்றது.

2007ஆம் ஆண்டு முதல், பெரெண்டினா நுண்நிதி சேவைகளை வரையறுக்கப்பட்ட பெரெண்டினா நுண்நிதி நிறுவனத்தினூடாக வழங்கியிருந்தது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியை பெறுவதற்கான தேவைக்கிணங்க நுண்நிதி சேவைகள் தற்போது புதிய நிறுவனமான பெரெண்டினா மைக்றோ  இன்வெஸ்ட்மன்ட்ஸ் கம்பனியால் (BMIC) செயற்படுத்தப்படுவதுடன்  நுண்நிதி நிறுவனமாக உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தபடுகின்றது. BMIC ஆனது பல்வேறுபட்ட நுண் நிதி சேவை, வியாபார அபிவிருத்தி சேவை மற்றும் சமூக பாதுகாப்புத் தீர்வுகளை இலங்கையின் குறைந்த வருமானமீட்டும் மக்களுக்காக வழங்கவுள்ளது. 

பெரெண்டினா மைக்றோ  இன்வெஸ்ட்மன்ட்ஸ் கம்பனி (BMIC) உரிமையை பெரெண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் (BDS) தன்வசம் கொண்டுள்ளது.

இது நன்மதிப்பைப் பெற்ற அரச சார்பற்ற நிறுவனமாக திகழ்வதுடன், நாட்டின் குறைந்த வசதிகள் படைத்தவர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. BMIC இனால் தற்போது 10 மாவட்டங்களைச் சேர்ந்த கிராமிய மற்றும் பெருந்தோட்டங்களின் 107,000க்கும் அதிகமான குடும்பங்களுக்கு சேவைகள் வழங்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .