2025 மே 21, புதன்கிழமை

பெலியத்தயில் யூனியன் அஷ்யூரன்ஸ் கிளை

Editorial   / 2018 மே 22 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ் தனது மற்றுமொரு கிளையை பெலியத்த பகுதியில் அங்குரார்ப்பணம் செய்துள்ளது. பெலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஆயுள் காப்புறுதி சேவைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்தக் கிளை அமைந்துள்ளது.   

பெலியத்த கிளை பெருமளவான வாகனத்தரிப்பிட வசதியுடன், காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தனது சேவைகளை வழங்கும் வகையில் இந்தக் கிளை அமைந்துள்ளது. ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கு சேவை பகுதிகள், ஊழியர்களுக்குப் பயிற்சி பெறக்கூடிய பகுதிகள் மற்றும் மேலும் பல வாடிக்கையாளர் வசதிகள் போன்றன அனைத்து சந்தர்ப்பங்களிலும் வழங்கும் வகையில் இந்தப் புதிய கிளை அமைந்துள்ளது.

இந்தக் கிளை நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், பிரத்தியேக நிதி ஆலோசகர்களும் நவீன தொழில்நுட்ப வசதிகளைத் தம்வசம் கொண்டுள்ளனர். இவற்றில் ‘டப்லெட்’ சாதனங்கள் மற்றும் ஒன்லைன் கட்டமைப்புகள் போன்றன உள்ளடங்கியுள்ளன. இந்த வரையறைகளற்ற வலையமைப்பின் மூலம் வாடிக்கையாளர்களின் இருப்பிட பகுதிகளுக்குச் சென்று, பரிபூரணமான சேவைகளை வழங்கக்கூடிய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.  

பெலியத்த கிளை இல. 67, தங்காலை வீதி, பெலியத்த எனும் முகவரியில் அமைந்துள்ளது. நாட்டில் 30 வருடகாலம் இயங்கும் முதலாவது ஆயுள் காப்புறுதி நிறுவனம் எனும் பெருமையை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்வசம் கொண்டுள்ளது.

நிபுணத்துவமும் அனுபவமும் வாய்ந்த நிர்வாகக் குழுவினரையும் உறுதியான மூலதன இருப்பையும் கொண்டுள்ளதுடன், மீள் காப்புறுதிகளை மேற்கொள்வதற்கான திடமான பங்காண்மை களைக்  கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், ‘நம்பிக்கை’ எனும் தனது உறுதி மொழிக்கமைவாக வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான, வசதியான மற்றும் கௌரவத்துடனான சேவைகளை வழங்கி வருகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .