2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

முடியாது என்பதை தவிர்ப்போம்

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வோம் முடியாது என்பதை தவிர்ப்போம், எனும் செயற்திட்டத்தின் அறிமுக நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் அண்மையில் நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டிருந்தனர். இலங்கையர்களின் கனவுகளை எய்துவதற்கு ஊக்குவிக்கும் வகையில் அங்கர் இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்க முன்வந்திருந்தது.

 

இந்த அறிமுக நிகழ்வில் பல பிரபல்யம் பெற்ற பிரமுகர்கள், அலங்காரமானக் காட்சிகூடங்கள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றின் மூலம் இலங்கையர்கள் எய்தியிருந்த முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகள் பிரதிபலிக்கப்பட்டிருந்தன. உள்நாட்டு சமையல்கலை நிபுணர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு தயாரிப்பு மற்றும் விற்பனைப் பகுதியும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பம் பற்றியும் இந்நிகழ்வில் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் பல சவால்களுக்கு மத்தியில் தமது வாழ்க்கையை முன்னெடுத்து தமது எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் நனவாக்கிக்கொண்ட இலங்கையர்கள் பற்றிய அறிமுகங்களும் இடம்பெற்றிருந்தன. இதில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் கிரிக்கெட் நட்சத்திரமான மஹேல ஜயவர்தனவும் பங்கேற்றிருந்தார். இவர் கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பை எய்துவதற்கு இடைவிடாது தாம் மேற்கொண்ட செயற்பாடுகள் பற்றிய தனது அனுபவங்களையும் பகிர்ந்திருந்தார்.

இலங்கையர்களை சாக்குப்போக்குகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு தெரிவித்த மஹேல ஜயவர்தன, இலங்கையின் தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கு நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த வீரர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகள் பற்றி விளக்கமளித்திருந்தார்.
எவரெஸ்ட் மலையின் உச்சியைத் தொட்ட முதலாவது இலங்கையர் எனும் பெருமையைப் பெற்ற ஜயந்தி

குரு-உதுபலா பல சவால்களுக்கு மத்தியில் உலகின் உச்ச இடத்தைத் தொட்டிருந்தார். இதன் போது, அவரின் பயணம் சாத்தியமற்றது என கருதிய மக்களும் காணப்பட்டனர், அவரின் இடைவிடாத முயற்சி மற்றும் ஒருமைப்படுத்தப்பட்ட சிந்தனை போன்றன அவரின் இலக்கை நோக்கி பயணிப்பதற்கு அவருக்கு உதவியாக அமைந்திருந்தது.

கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபடும் ஹோவார்ட் மார்டென்ஸ்டைன் மற்றும் பெண் வணிக விமானியான ஹிருணி குணசேகர ஆகியோரும் சிறுவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமது பிரசன்னத்தை ஏற்படுத்தியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X