2026 மே 07, வியாழக்கிழமை

முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெகாபொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுடன் முத்தரப்பு உடன்படிக்கைக் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பு போர்ட் சிட்டி செயற்றிட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனமான  CHEC போர்ட் சிட்டி கொழும்பு (பிரைவட்) லிமிட்டட் அறிவித்துள்ளது.

2014 செப்டெம்பர் 16ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்த உடன்படிக்கைக்குப் பதிலாக இந்த உடன்படிக்கை இலங்கை அரசாங்கத்துக்கும், செயற்றிட்ட கம்பனிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு போர்ட் சிட்டி நிர்மாணப்பணிகள் மீது இலங்கை அரசாங்கம் பிரயோகித்திருந்த தற்காலிக தடை உத்தரவை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நீக்கிகொள்வதுத் தொடர்பில் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து இந்தப் புதிய முத்தரப்பு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் மெகாபொலிஸ் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் சூழல் பாதிப்பு மதிப்பீடு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த செயற்றிட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கான அனுமதியைக் கடற்கரைப் பாதுகாப்பு திணைக்களம் வழங்கியிருந்தது.

இந்தப் புதிய உடன்படிக்கையின் பிரகாரம், செயற்றிட்ட நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியன கொழும்பு போர்ட் சிட்டியை நிர்மாணிப்பதுத் தொடர்பில் பொதுவான நோக்கத்தைக் கொண்டுள்ளன. இலங்கையில் தற்போது மாபெரும் முதலீடுகளை மேற்கொண்டுள்ள ஒரே தனியார் துறை அபிவிருத்தி செயற்றிட்டமாக இது அமைந்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தத்திட்டம் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள், வாழ்விடம், பணியிடம், பொது மற்றும் பொழுதுபோக்கு பகுதிகள் போன்றன இந்தப் புதிய நகரத்தில் அமைந்திருக்கும்.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் வௌ;வேறு துறைகளில் 83000 புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து கவரும் என்பதுடன், அடுத்த 20-30 வருட காலப்பகுதியினுள் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் எதிர்பார்த்துள்ளது.

இலங்கையில் போர்ட் சிட்டி வளாகத்தில் சர்வதேச நிதி மற்றும் வியாபார மாவட்டமொன்றை நிறுவ தீர்மானித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே, இந்த செயற்றிட்டத்தை 'கொழும்பு இன்டர்நஷனல் ஃபினான்ஷியல் சிட்டி' என பெயர் மாற்றம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த செயற்பாடுகளுக்கு செயற்திட்ட கம்பனி முழு ஆதரவையும் வழங்கும் என்பதுடன், இலங்கை அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளுக்கும் எதிர்காலத்தில் தமது பங்களிப்பை வழங்க தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .