2025 ஜூலை 26, சனிக்கிழமை

முதல் தர வர்த்தக நாமம் தனதாக்கியது சிங்கர்

Gavitha   / 2017 மார்ச் 21 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கர் ஸ்ரீ லங்கா, அண்மையில் வோட்டர்ஸ் எட்ஜில் இடம்பெற்ற SLIM-Nielsen மக்கள் விருதுகள் நிகழ்வில், தொடர்ந்து 11ஆவது ஆண்டாகவும், இலங்கையில் மிகவும் பிரபலமான வர்த்தகநாமம் என்ற விருதைப் பெற்றுள்ளது.  

கடந்த ஆண்டு விருதுகள் நிகழ்வில் ஈட்டியிருந்த வெற்றிகளை மீளவும் ஈட்டும் வகையில், “வருடத்தின் இளையோரின் அபிமானத்தை வென்ற வர்த்தகநாமம்”, “நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்கள் - வருடத்தின் மிகச் சிறந்த வர்த்தகநாமம்” ஆகிய விருதுகளுடன், ‘வருடத்தின் SLIM-Nielsen மக்களின் வர்த்தகநாமம் - 2017) போன்ற விருதுகளையும் தனதாக்கியிருந்தது.  

இலங்கை சந்தைப்படுத்தல் கற்கை நிலையத்தால் (SLIM), ஏற்பாடு செய்யப்பட்ட SLIM-Nielsen மக்கள் விருதுகள் நிகழ்வு, வர்த்தகநாமங்கள், பிரபலங்கள், விளம்பரங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் என கடந்த ஆண்டில் மக்களின் சிந்தனைகளில் கணிசமான செல்வாக்கினை சம்பாதித்துள்ளவற்றில், தமக்கு விருப்பமானவற்றை மக்களே தெரிவு செய்வதற்கு இடமளிக்கின்றது. எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ தமக்கு விருதை வழங்குமாறு விண்ணப்பிக்க முடியாது, மாறாக பொதுமக்களே அவற்றைப் பரிந்துரை செய்தல் வேண்டும். மக்களின் அன்றாட வாழ்வில் அவர்களின் உள்ளங்களிலும், எண்ணங்களிலும் நெருக்கமானவற்றை, பொதுமக்கள் தமது கருத்துக்களின் அடிப்படையில் உண்மையாக வெளிப்படுத்துவதற்கு இந்நிகழ்வு இடமளிக்கின்றது.  

இதற்காக 25 மாவட்டங்களிலும் எழுந்தமான மாதிரி அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 18 முதல் 50 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இந்நோக்கத்திற்காக முழுமையான கருத்துக்கணிப்பு ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வகையிலான நேர்காணல்களை நடாத்துவதில் விசேட தேர்ச்சி பெற்ற Nielsenகளை ஆராய்ச்சி அதிகாரிகளால் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்தை உபயோகித்து நேரடி நேர்காணல் மூலமாக தரவுகள் சேகரிக்கப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X