2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மூன்று அலுவலகங்களுக்கு CarbonConscious சான்று

Gavitha   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது கூட்டாண்மை நிலைபேறான செயற்பாடுகளை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், காபன் கொன்சல்டிங் கம்பனியுடன் (CCC) நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அண்மையில் இணைந்து யூனியன் பிளேஸில் அமைந்துள்ள தனது தலைமையகம் மற்றும் நவம் மாவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஏனைய இரு அலுவலகங்களுக்கு CarbonConscious சான்றை பெற்றுள்ளது. இந்த சான்றின் மூலமாக குறித்த பிரதேசங்களில் சூழல் மீதான அளவுகோல், நிர்வாகம் மற்றும் பாதிப்பை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் மூன்று ஆண்டுகளுக்கு கண்காணிக்கப்படவுள்ளன.  

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரேணுகா பெர்ணான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “ஆண்டாண்டு காலமாக, சமூக பொறுப்புணர்வு செயற்பாடு என்பது வங்கியியல் செயற்பாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக உள்ளது. இதை நாம் கொள்கை அடிப்படையிலும், கட்டுக்கோப்பான விதத்திலும் பின்பற்றுவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதற்கமைய, CCC உடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலமாக எமது ஊழியர்கள் மற்றும் பங்காளர்களுக்கு நிலைபேறான மற்றும் சூழலுக்கு நட்புறவான சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். எமது வியாபார செயற்பாடுகளில் சகல மட்டங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நிலைபேறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளோம். இந்த சான்றிதழ்கள் எமது முயற்சிகளை பெருமளவு ஊக்குவிப்பனவாக அமைந்திருக்கும்” என்றார்.  
தமது காபன் வெளியீடுகளை கணிப்பிடுவதுடன், மேலும் இரு வருட காலப்பகுதிக்கு மேற்பார்வை செய்து மீள்மதிப்பீடுகளை மேற்கொள்ள தயாராகவுள்ள நிறுவனங்களுக்கு, இந்த சான்றுகள் வழங்கப்படுகின்றன.

பரிபூரண காபன் முகாமைத்துவ திட்டம் என்பது, நிறுவனத்தின் அர்ப்பணிப்பினூடாக பிரத்தியேகமான முறையில் நிறுவனத்தின் காபன் வெளியீடு தொடர்பில் கண்காணித்தல், நிர்வகித்தல் மற்றும் பாதிப்பு ஏற்படலை குறைத்தல் போன்றவற்றுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. மேலும், பச்சைஇல்ல வாயு (GHG) மதிப்பீடுகளின் போது சர்வதேச வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும். இவை வெளியக தகைமை வாய்ந்த மற்றும் சுயாதீனமான மூன்றாம் தரப்பினால் உறுதித்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்காக உறுதி செய்யப்பட வேண்டும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X