2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மக்கள் அதிகம் விரும்பும் எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா

Gavitha   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியாக பத்தாவது ஆண்டாகவும் 'ஆண்டின் சிறந்த பான வர்த்தக நாமம்' விருதை, எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா தனதாக்கிக்கொண்டுள்ளது. இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் (SLIM) மற்றும் நீல்சன் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, 2016 மக்கள் விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது இந்த விருது கிறீம் சோடாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. 2006ஆம் ஆண்டு மக்கள் விருதுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது முதல், இந்த விருதை எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் (SLIM) மற்றும் நீல்சன் கம்பனி ஆகியவற்றின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் விருதுகள் என்பதன் மூலமாக, நுகர்வோரின் தெரிவுகள் பதிவு செய்யப்பட்டு, அதிகளவு தெரிவைப் பெற்ற நாமங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. பொது மக்கள் இந்த வெற்றியாளர்களை தெரிவு செய்கின்றமையால், தமக்கு விருப்பமான வர்த்தக நாமங்கள், நபர்கள், விளம்பரங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் போன்றவற்றை தெரிவு செய்திருந்தனர். வெற்றியாளர்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டிருந்த நேருக்கு - நேர் கருத்துக்கணிப்புகளை நீல்சன் மேற்கொண்டிருந்தது. இதில் 15 - 60 வயதுக்குட்பட்ட ஆண்; மற்றும் பெண் இரு பாலாரும் நாட்டின் சகல மாவட்டங்களிலிருந்தும் ஐந்து மாதங்களுக்கு இவ்வாறு நேர்காணல்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா 2016 மக்கள் விருதுகள் வழங்கலில் விருதை பெற்றுக் கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க விடயம் தொடர்பில் சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சியின் பானங்கள் பிரிவின் தலைமை அதிகாரியும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பதில் தலைவருமான தமிந்த கம்லத் கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற பானமாக 10 வருட காலமாக எலிபன்ட் ஹவுஸ் கிறீம் சோடா தொடர்ந்து மக்களின் தெரிவாக அமைந்துள்ளது. இவை அனைத்தும் நிலைபேறான வாடிக்கையாளர் அர்ப்பணிப்பு மற்றும் எமது நீண்ட கால மற்றும் புதிய வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிகரமான ஈடுபாடு போன்றன அமைந்துள்ளன. அவர்களின் தொடர்ச்சியான அன்பு மற்றும் உதவி இன்றி எம்மால் இவை எதையும் முன்னெடுத்திருக்க முடியாது, இதற்காக நாம் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X