Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மகாவலி அதிகார சபை ஏற்பாடு செய்த மகாவலி வலயத்தின் சிறந்த விவசாயி மற்றும் சிறந்த விவசாய அமைப்பைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் வெற்றியாளர்களுக்கு பரிசில்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கோலாகலமாக அண்மையில் நடைபெற்றது.
எம்பிலிபிட்டி, மகாவலி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டதுடன் சிறந்த விவசாயியாக உருலுவௌ வலயத்தின் கல்கிரியாகம, தம்பேவட்டன பகுதியைச் சேர்ந்த ஆர்.பி. பிரேமதாச தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பிறவுண்ஸ் நிறுவனமும் LOLC MICRO CREDITநிறுவனமும் இணைந்து புத்தம் புதிய பிறவுண்ஸ் டஃவே (BT 45D101B) டிரக்டர் ஒன்றைப் பரிசளித்திருந்தன.
அதியுயர் தொழில்நுட்பத்துடன் கூடிய இலங்கை விவசாயிகளின் தேவைக்குப் பொருந்தும் வகையில் உற்பத்தி செய்யப்பட்ட டஃவே (TAFE) டிரக்டர் பிறவுண்ஸ் விவசாய பிரிவால் விநியோகிக்கப்படும் முதல்தர டிரக்டராகும்.இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பிறவுண்ஸ் விவசாயப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் சஞ்சய நிஷ்ஷங்க “பிறவுன்ஸ் விவசாய பிரிவு ஆரம்பம் முதலே விவசாய உபகரணங்கள் ஊடாக இலங்கையிலுள்ள விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நிறுவனமாகும்.
நாட்டுக்கே சோறு வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படும் விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவப்படுத்த மகாவலி அதிகார சபை எடுத்த முயற்சிகளுக்கு அனுசரணை வழங்கக் கிடைத்தமை எமக்கு சந்தோஷமான விடயமாகும். நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலமாக இலங்கையின் விவசாயத்துடன் இணைந்த நாம், உள்ளூர் விவசாயிகளின் மேம்பாட்டுக்கு உதவக் கிடைத்தமையானது எமக்கு பெருமையான விடயமாகும்” எனக் கூறினார். மகாவலி நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் விவசாயமானது நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு முக்கிய பங்காற்றுகின்றது.
மகாவலியின் சிறந்த விவசாயி மற்றும் சிறந்த விவசாய அமைப்பு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கும் போட்டியின் முக்கிய நோக்கமாக இந் நிலப்பரப்பின் அண்மித்த பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபடும் ஒரு இலட்சத்து அறுபத்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகளை மேம்படுத்துவதைக் கொண்டு அமைந்துள்ளது.
பசுமையான விவசாயம், நீர் முகாமைத்துவம் மற்றும் நீர்பாசனக் கட்டமைப்பைப் பாதுகாத்து மேம்படுத்தல் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து மகாவலி அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்டது.
18 minute ago
23 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
4 hours ago
6 hours ago