Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
Kia Motors (Lanka)அதன் தற்போதைய விற்பனை அபிவிருத்தி இயக்கத்தின் ஒரு பகுதியாக மட்டக்களப்பில் அதன் முதலாவது வாகன விற்பனை நிலையத்தை திறந்து வைத்துள்ளது.
மோட்டார் வாகன வர்த்தகத்தில் அனுபவம் வாய்ந்த N.K.D. Ratnam and Co இனால் அதிகாரம் பெற்ற விற்பனை நிலையமாக நடத்தப்பட இருக்கும் புதியக் காட்சியறை 570, திருமலை வீதி, சின்ன ஊறணி, மட்டக்களப்பு என்ற முகவரியில் அமைந்துள்ளது. இலங்கையில் பிரபலமடைந்துள்ள முயை வாகனங்களை அந்தப் பிராந்தியத்தில் உள்ளவர்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ள இந்நிலையம் மிக வசதியாக இருக்கும் என்று நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
Kia இனால் நிர்ணயிக்கப்பட்ட சர்வதேசத் தரத்திற்கும் வழிகாட்டல்களுக்கும் அமைய வடிவமைக்கப்பட்டு சாதனங்கள் பொருத்தப்பட்ட புதிய விற்பனை நிலையம் விசாலமான வாடிக்கையாளர் வாகன தரிப்பிடத்துடன் மட்டக்களப்பு நகரில் மிகவும் பிரசித்தமான இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. Kia இனதும் அதன் வாடிக்கையாளர்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் Kia Motors Lanka ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து சகல உதவிகளையும் செய்து கொடுக்கும்.
புதியக் காட்சியறையின் வைபவ ரிதியான திறப்புவிழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த Kia Motors (Lanka) முகாமைப் பணிப்பாளர் திரு. மஹேன் தம்பையா கூறியதாவது, 'மட்டக்களப்பு மாவட்டத்திலும் சூழவுள்ள பிரதேசங்களிலும் விற்பனை வளங்கள் அபரிமிதமாக காணப்படுகின்றன.
கடந்த சில வருடங்களில் முயை நிறுவனம் பெற்றுள்ள மகத்தான வெற்றிக்கு மேலும் மெருகூட்டும் வகையிலான விற்பனை பங்காளரே நிறுவனத்திற்கு கிடைத்துள்ளார் என்று நாங்கள் நம்புகிறோம்.'
முக்கிய நகரங்களில் அபிவிருத்தியை மேற்கொள்வதில் முதலீடு செய்வதற்கான அர்ப்பணிப்பு, Kia Motors இன் பிரதான நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டு அமுல் செய்யப்படும் திட்டங்கள், விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களின் பிரதேசங்களில் அவர்களுடன் சிறந்தத் தொடர்புகளைப் பேணுவதுக்கான வசதிகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவை இலங்கையில் Kia நிறுவனத்தின் விற்பனையாளர் விருத்தி திட்டத்தில் அடங்குகின்றன.
இலங்கையில் Kia Motors (Lanka) இனால் விற்பனை செய்யப்படும் வகைகளில் அடையாள சின்னமாக விளங்கும் Kia Sorento மற்றும் Kia Sportage SUVs, the Kia Optima luxury sedan, the Kia Cerato mid-sized sedan, the Kia Rio subcompact sedan, the Kia Soul compact SUV, the Kia Picanto compact car and the Kia Grand Carnival Multi-purpose Vehicle (MPV)ஆகியன அடங்குகின்றன.
3 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago