Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 டிசெம்பர் 11 , பி.ப. 01:13 - 1 - {{hitsCtrl.values.hits}}
உலகின் முன்னணி அஞ்சல் மற்றும் சரக்கியல் குழுமமான Deutsche Post DHL குழுமத்தின் அங்கமான DHL ஸ்ரீலங்கா நிறுவனமானது அதன் ஊழியர்களின் பங்களிப்புடன் உள்நாட்டு சமூகத்தினருக்கு பயனளிக்கக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுடன் சர்வதேச தன்னார்வ தொண்டர் தினம் 2015 இனை கொண்டாடியிருந்தது. சர்வதேச தன்னார்வ தொண்டர் தினம் எனப்படுவது உள்நாட்டு சமூகத்தினருக்கு திருப்பி செலுத்துவதற்கான உலகளாவிய இயக்கியாகவும், ஊழியர்கள் மத்தியில் தொண்டாற்றும் மனப்பான்மைய உருவாக்கும் செயற்பாடாகவும் அமைந்துள்ளது.
இலங்கையில் உள்ள DHL Global Forwarding மற்றும் DHL Express நிறுவனங்களைச் சேர்ந்த 50 ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து தேசிய மனநல சுகாதார நிலையத்தின் கீழ் இயங்கும் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான இலங்கையின் மிகப்பெரிய பிராந்திய பராமரிப்பு நிலையமான முல்லேரியா, 'தஹலியா', வார்ட் இல 05, (இல்லம் முதல் 45 தேவைப்பாடுகள்) புனர்வாழ்வு மையத்தினை புதுப்பித்திருந்தது. மேலும் 40 மெத்தைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்ததுடன், நோயாளிகளுக்கு உணவு வழங்கி ஊழியர்கள் தமது நேரத்தை அவர்களுடன் செலவிட்டிருந்தனர்.
'சரக்கியல் துறையில் தலைவர் எனும் ரீதியில், நாம் வாழ்கின்ற மற்றும் பணிபுரிகின்ற சமூகத்திற்கு திருப்பிச் செலுத்துவதற்காக எம்மை அர்ப்பணித்துள்ளோம். இந்த வருட சர்வதேச தன்னார்வ தொண்டர் தின செயற்பாடுகளில் எமது ஊழியர்கள் தன்னார்வத்துடன் முன்வந்து மக்களுக்கு உதவியமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்' என DHL Express இன் இலங்கை செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி திமித்ரி பெரோரா மற்றும் DHL Global Forwarding இன் தலைமை அதிகாரி நஜுப்-ஹர் ரஹுமான் ஆகிய இருவரும் தெரிவித்திருந்தனர்.
'உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் உறுதியான கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தை DHL கொண்டுள்ளது. DPDHL குழுமத்தின் ஓர் அங்கம் எனும் ரீதியில், எமது குழுமம் கவனம் செலுத்தி வரும் கூட்டாண்மை பொறுப்புணர்ச்சி பிரிவுகளான GoGreen, GoHelp மற்றும் GoTeach தொடர்பில் நாம் பெருமையடைகின்றோம். இவை வெவ்வேறு திட்டங்களுக்கு ஆதரவும், நிலையான வளர்ச்சியையும் ஊக்குவித்து வருகிறது' என மேலும் அவர் தெரிவித்தார்.
DHLE LK நிறுவனமானது உலகளாவிய தன்னார்வ தொண்டர் தின செயற்பாடாக கங்கொடவில குழந்தைகள் காப்பகத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் பொழுதுபோக்கு நிலையத்தினை புதுப்பித்திருந்ததுடன், 400 புத்தகங்கள், 28” வர்ண தொலைக்காட்சி, 150 கல்விசார் DVD'கள் மற்றும் போர்ட் கேம்கள் மற்றும் புதிர் விளையாட்டுகள் போன்றவற்றை அன்பளிப்பு செய்து தமது 'Living Responsibility Project' திட்டத்தை வலுவூட்டியிருந்தது. இந்த குழந்தைகள் காப்பகத்தினை கடந்த அரை நூற்றாண்டுகளாக இலங்கையிலுள்ள அனாதை குழந்தைகளுக்;கு ஆதரவு வழங்கிவரும் இலாப நோக்கற்ற குழுமத்தின் மூலம் நடாத்தப்பட்டு வருகிறது. மேலும் DHLE LKஇன் ஊழியர்கள் மூலம் குழந்தைகள் காப்பகத்திற்கு முழுமையான வர்ணம் பூசப்பட்டிருந்தது.
இதற்கு மேலதிகமாக, DHLE LK ஆனது பிலியந்தல பிரதேசத்தில் அமைந்துள்ள SOS கிராமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை வழங்கியிருந்தது. இதன் போது குழந்தைகளுக்கான கிரிக்கெட் போட்டித்தொடர் ஒன்றினை ஊழியர்கள் ஒழுங்கு செய்திருந்ததுடன், வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
கடந்த 2008ஆம் ஆண்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தன்னார்வ தொண்டர் தினம், அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டதுடன், இன்று உலகளாவிய குழுமத்தின் விஸ்தரிக்கப்பட்ட திட்டங்களைப் போல வலிமை பெற்றுள்ளது. இந்த வருட உலகளாவிய தன்னார்வ தினம் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி – 27 ஆம் திகதி வரை கொண்டாடப்பட்டதுடன், வருடம் முழுவதும் இந்த செயற்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2013ஆம் ஆண்டின் முயற்சியானது ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்பட்டதுடன், மிகப் பெரியளவில் வெற்றியடைந்திருந்தது. மேலும் கடந்த 2014இல் உலகம் முழுவதுமுள்ள 117 நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட சுமார் 1,700 திட்டங்களில் 108,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச தன்னார்வ தொண்டர் தினம் 2015 இன் ஓர் அங்கமாக, உள்நாட்டவருக்கு ஆதரவளிக்கும் பல்வேறு சமூகத் திட்டங்களில் உலகம் முழுவதும் உள்ள Deutsche Post DHL குழுமத்தின் அலுவலகங்கள் பங்குபற்றியிருந்தன. அனைத்து உலகளாவிய தன்னார்வ தொண்டர் தின செயற்பாடுகளின் ஊடாகவும் GoGreen (சூழலை பாதுகாத்தல்), GoHelp (தேவையான மக்களுக்கு திறன் சார்ந்த உதவிகளை வழங்கல்) மற்றும் GoTeach (கல்வி வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தல்) போன்ற குழுமத்தின் மூன்று சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்கப்படுகிறது.
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
Suresh Saturday, 21 November 2020 01:36 PM
எங்கள் ஊரில் 23 வயது மதிக்க தக்க இரண்டு நபர்கள் மனநல நோயாளிகளாக உள்ளனர் . உதவி செய்துகொடுத்தல் நன்றாக இருக்கும் தயவு கூர்ந்து வாழ்க்கை தொடர்வதற்கு உதவுமாறு கேட்டுக்கு கொள்கிறோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago