2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மருத்துவ அறிவு பகர்வுக்கு சிறந்த நிலையம்

Gavitha   / 2017 ஜனவரி 11 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தனியார் சுகாதார பராமரிப்புத் துறையில், லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் மூலமாக “Clinical Sessions 2016” எனும் செயலமர்வு, மருத்துவ நிபுணர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டின் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பயிலும் கலாசாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களின் அறிவை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டும் இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, தேசிய மட்டத்தில் முன்னிலை வகிக்கும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பிஎல்சி, தரமான மருத்துவ பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக இந்தக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. அறிமுக லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் Clinical Sessions செயலமர்வுகள், லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் 10ஆம் மாடியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றன. இதில் புகழ்பெற்ற வைத்திய ஆலோசகர்கள் மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். மேலும் நவலோக ஹொஸ்பிட்டல்ஸ், ஆசிரி சென்ரல் ஹொஸ்பிட்டல்ஸ், டேர்டன்ஸ் ஹொஸ்பிட்டல், ஹேமாஸ் ஹொஸ்பிட்டல்ஸ் (வத்தளை), நைன்வெல்ஸ் ஹொஸ்பிட்டல்ஸ், நெவில் பெர்னாண்டொ ஹொஸ்பிட்டல்ஸ், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை, பிரவுண்ஸ் ஹொஸ்பிட்டல், டெல்மன் ஹொஸ்பிட்டல், பொலிஸ் மற்றும் இராணுவ வைத்தியசாலைகள் மற்றும் நீரிழிவு மற்றும் என்டோகிரைனொலொஜி நிலையம் மற்றும் வெஸ்டர்ன் இன்ஃபேர்மரி ஆகியவற்றின் மருத்துவ நிபுணர்கள், மருத்துவ அதிகாரிகள், தாதியர் மற்றும் சுகாதார பராமரிப்பு ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  

லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் மருத்துவ சேவைகள் பணிப்பாளர் வைத்தியர். இரேஷா பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், “உலகளாவிய ரீதியில் பரந்து வசிக்கும் இலங்கையின் மருத்துவ நிபுணர்கள், வேகமாக வளர்ந்து வரும் மருத்துவத் தொழில்நுட்பம் தொடர்பில் விளக்கங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு, லங்கா ஹொஸ்பிட்டல்ஸைச் சேர்ந்த நாம், இச்செயலமர்வை ஏற்பாடு செய்திருந்ததன் மூலமாக, நோயாளர்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வைத்தியர்கள் மத்தியில் அறிவு பகிர்வை மேற்கொள்ள தீர்மானித்தோம். அரசாங்க மருத்துவ அதிகார அமைப்புகளில் இதுபோன்ற பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனமொன்றினால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். பொதுச்சேவையில் ஒர் அங்கமாக, தரமான நோயாளர் பராமரிப்பு சேவைகளை பெற்றுக்கொடுப்பதில் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், தனது காலடியைப் பதித்துள்ளது” என்றார்.

Clinical Sessions செயலமர்வுகளில் விரிவுரைகள், செயல் விளக்கங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்றன நாள் முழுவதும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவற்றைப் பிரத்தியேகமான மருத்துவ நிபுணர்கள் மேற்பார்வை செய்திருந்தனர். புகழ்பெற்றப் பாடகரும், நிகழ்ச்சி வழங்குநருமான கிளிஃபர்ட் ரிச்சர்ட்ஸ், மருத்துவ நிலை சாராத செயற்பாடுகள் தொடர்பில் தனியார் சுகாதார பராமரிப்புச் சேவை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து நோயாளர்களின் எதிர்பார்ப்பு என்பது தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X