2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

மற்றுமொரு தரப்படுத்தலில் மதிப்பிறக்கம்

Freelancer   / 2022 ஏப்ரல் 19 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கடன் தரப்படுத்தலை Caa2 என்பதிலிருந்து Ca எனும் நிலைக்கு மதிப்பிறக்கம் செய்துள்ளதாக சர்வதேச தரப்படுத்தல் அமைப்புகளில் ஒன்றான மூடிஸ் இன்வெஸ்ட்டர் சேர்விஸ் (Moody’s) அறிவித்துள்ளது.

இலங்கை அதன் வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்தாமல் இருப்பது தொடர்பில் கடந்த வாரம் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து இந்த தரப்படுத்தலை வெளியிட்டுள்ளது.

“நாட்டின் மிகவும் குறைந்த அந்நியச் செலாவணி இருப்பு மற்றும் மிகவும் வலுவிழந்த கடன் பெறும் நிலை ஆகியன தொடர்பில் நாட்டின் ஸ்தாபனங்களுக்கு கவனம் செலுத்துவதற்கு போதியளவு வழிகாட்டல்களை வழங்க முடியாத ஆளுகை கட்டமைப்பை பிரதிபலிப்பது” என்பது இந்த தரப்படுத்தல் குறிப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .