Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 27 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் ‘மிகவும் பாராட்டுக்குரிய 10 நிறுவனங்கள்’ வரிசையில் கொமர்ஷல் வங்கியும் இடம் பிடித்துள்ளது. சர்வதேச வர்த்தக சபையின் (ICC) விருது வழங்கும் நிகழ்வில் இந்தச் சிறப்பு கொமர்ஷல் வங்கிக்கு கிடைத்துள்ளது. இலங்கையின் முகாமைத்துவக் கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனத்துடன் (CIMA) இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த பத்து நிறுவனங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கம்பனியின் நிதி ரீதியான சிறப்புச் செயற்பாடுகள், அதன் பங்குதாரர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் அது உருவாக்குகின்ற பெறுமதிகள் என்பனவற்றுக்கான ஒரு அங்கீகாரமாகவே இந்த விருது வழங்கும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதி செயற்பாடு, சமூக முதலீடு, இணக்கப்பாடு ஆகிய பிரதான விடயங்கள் இதற்காக கருத்தில் கொள்ளப்படுகின்றன.
நாட்டின் முன்னணி தொழில்தருனர்களில் ஒருவரான கொமர்ஷல் வங்கி தொடர் கற்றலையும் அறிவுத் தேடலையும், செயற்பாட்டு அடிப்படையிலான மதிப்பீடு, வாழ்க்கை ஆயுள் சமநிலை, குழு ரீதியான செயற்பாடு என்பனவற்றை தூண்டி வருவதாக தெரிவித்துள்ளது. வங்கியின் பயிற்சி மற்றும் அபிவிருத்தி மூலோபாயம் என்பன ஆகக் கூடிய தொழில் திருப்தி மற்றும் தொழில் முன்னேற்றம் என்பனவற்றை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு தற்கால மற்றும் எதிர்கால இலக்குகளை தனது ஊழியர்கள் சமாளிக்கும் வகையில் அவர்களின் ஆற்றல் மேம்பாடும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
“சம்பந்தப்பட்ட சகல தரப்பினரதும் அபிலாஷைகள் மற்றும் தேவைகள் என்பனவற்றைக் கருத்திற் கொண்டு பாராட்டுக்களும் கௌரவங்களும் எப்போதும் பெறப்பட்டு வருகின்றன” என்று வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ரெங்கநாதன கூறினார். “எந்தவொரு தொழில் முயற்சிக்கும் இவை மிகவும் பெறுமதியானவை ஆகும். அதிலும் நிதிச் சேவையில் உள்ளவர்களுக்கு இது மிகவும் பெறுமதியானதாகும். காரணம் இதில் வாடிக்கையாளர்களின் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வெல்வதே மிகவும் பிரதானமானதாகும். அந்த வகையில் இலங்கையின் பத்து முன்னணி கம்பனிகள் வரிசையில் நாமும் இடம்பிடித்துள்ளமை எமக்கு மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்” என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago