2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மீண்டும் செலான் வங்கியின் அல்பர்ட் அங்கிள்

S.Sekar   / 2022 நவம்பர் 14 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி, மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்திருந்த வெஸ்டர்ன் யூனியனின் பணப் பரிமாற்றல் சேவை தொலைக்காட்சி விளம்பரத்தின் அல்பர்ட் அங்கிள் கதாபாத்திரத்தை மீளமைப்பதற்கு முன்வந்துள்ளது. இதனூடாக உத்தியோகபூர்வ முறைகளினூடாக வெளிநாட்டு பண அனுப்புகைகளை ஊக்குவிக்க செலான் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இரண்டு தசாப்த காலப்பகுதிக்கு முன்னர் விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்ததுடன், திருமண தினத்தன்று தொலைந்த மோதிரத்துக்கு பதிலாக மாற்று மோதிரமொன்றை கொள்வனவு செய்வதற்கு அவசரமாக ரூ. 50,000 பணத்தை வெஸ்டர்ன் யூனியன் ஊடாக சுரேஷுக்கு அல்பர்ட் அங்கிள் அனுப்பி உதவுவதாக இந்த விளம்பரம் அமைந்திருந்தது. அன்று முதல், இந்த அல்பர்ட் அங்கிள் யார் என்பது இரகசியமாகவே இருந்து வந்துள்ளதுடன், வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெறுவதற்கு மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் ஒரு கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது.

வெஸ்டர்ன் யூனியன் போன்ற உத்தியோகபூர்வ நாளிகைகளினூடாக வெளிநாட்டுக்கு பணத்தை அனுப்பவும், பெற்றுக் கொள்ளவும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை ஊக்குவிப்பதற்காக இந்த கதாபாத்திரத்தை மீளமைக்க செலான் வங்கி முன்வந்துள்ளது. இலங்கையின் முதலாவது ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக 15 பொறுப்பு வாய்ந்த குடிமக்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படும் என்பதுடன், பிரத்தியேகமான அல்பர்ட் அங்கிள் டிஜிட்டல் பரிசுகள் அடங்கலாக பல வெகுமதிகளை வழங்கும்.

இந்தத் திட்டம் தொடர்பாக செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைகள் உதவி பொது முகாமையாளர் காமிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடியிலிருந்து ஓரளவு மீள்வதற்கு நாட்டுக்கு கிடைக்கும் அந்நியச் செலாவணியை அதிகரிக்கச் செய்வது முக்கியமானதாகும். இதற்காக அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, உத்தியோகபூர்வ நாளிகைகளினூடாக பணத்தை அனுப்பும் முறையை ஊக்குவித்து அதிகரிக்கச் செய்வதற்கும், அதனூடாக தேசத்துக்கு தீர்வைக் காண்பதில் பங்களிப்பு வழங்குவதற்கும் ஏதேனும் புத்தாக்கமான முறையைக் கையாள்வதைப் பற்றி சிந்தித்திருந்தது. மக்கள் மத்தியில் மனம்மறவாமல் தற்போதும் நிலைத்திருக்கும் அல்பர்ட் அங்கிள் கதாபாத்திரத்தை மீளமைத்து, இளைஞர்களையும், வயது முதிர்ந்தவர்களையும், உத்தியோகபூர்வ நாளிகைகளினூடாக பணத்தை அனுப்பவும், பெறவும் ஊக்குவித்து, தேசத்தின் தேவையை நிவர்த்தி செய்வதில் பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளது.” என்றார்.

டிஜிட்டல் பரிசுகள் அல்லது non-fungible tokens (NFTs) போன்றன blockchain இல் காணப்படும் cryptographic சொத்துக்களாக அமைந்திருக்கும் என்பதுடன், இவை கலைப் படைப்பு அல்லது ரியல் எஸ்டேட் போன்ற நிஜஉலகப் பொருட்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்திருக்கும். ஒவ்வொரு NFT க்கும் பிரத்தியேகமான அடையாளக் குறியீடு காணப்படுவதுடன், ஏனையவற்றிலிருந்து வேறுபடுத்திக் காண்பிப்பதற்கான metadata ஐயும் கொண்டிருக்கும். நிஜ உலகின் புலனாகும் சொத்துக்களை ‘Tokenizing’செய்வதனூடாக, கொள்வனவு, விற்பனை மற்றும் வியாபார நடவடிக்கைகளை அதிகளவு வினைத்திறனானதாகவும், மோசடிகள் இடம்பெறும் வாய்ப்புகளைக் குறைப்பதாகவும் அமைந்துள்ளது.

NFTகளை மையப்படுத்திய, செலான் வங்கியின் பிரத்தியேகமான திட்டத்தினூடாக, 15 வெற்றியாளர்களுக்கும் தலா பிரத்தியேகமான அல்பர்ட் அங்கிள் NFT ஐ வழங்கும். 15 வெற்றியாளர்களிலிருந்து ஒரு வெற்றியாளருக்கு ரூ. 100,000 பரிசும் வழங்கப்படும். வெற்றியாளர்கள் மாபெரும் அதிர்ஷ்டசாலி தெரிவிலிருந்து தெரிவு செய்யப்படுவர். இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 45 நாட்களுக்குள், 500 அமெரிக்க டொலர்களுக்கு நிகரான தொகையை அனுப்பும் எந்தவொரு வெளிநாட்டு நாணயத் தொகையையும் வங்கியின் வெஸ்டர்ன் யூனியன் சேவையினூடாக அனுப்புவோர், செலான் வங்கியின் சமூக வலைத்தள நாளிகைகளினூடாக குறியீட்டு இலக்கத்தை பதிவு செய்வதனூடாக இந்தப் பரிசுகளுக்கான தகைமையைப் பெறுவார்கள்.

செலான் வங்கியின் முன்னுரிமை ஹொட்லைன் இலக்கம், சகல வங்கித் தீர்வுகளுக்கும் கிளைகளில் முன்னுரிமைச் சேவை மற்றும் பல வசதிகளை வெற்றியாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .