2025 ஜூலை 24, வியாழக்கிழமை

முன்னணி வலையமைப்பாக மாறிய மொபிடெல்

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் தேசிய தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான மொபிடெல் பிரைவட் லிமிடெட், அதன் 4G LTE வலையமைப்பில் தற்போதுள்ள 900MHZ ஸ்பெக்ட்ரம்களை புதுப்பிப்பதன் மூலம் மேம்படுத்தியுள்ளது. இந்த முன்முயற்சியானது, இலங்கையின் முதலாவது வலையமைப்பு வரிசைப்படுத்தல் என்பதோடு இதன் மூலம் இலங்கையின் LTE கவரேஜ் அதிகரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்,  இலங்கையில் முதன்மையான வலையமைப்பாக LTE Broadband மாறியுள்ளது.  

மொபிடெல் தலைவர் பி. ஜி. குமரேசிங்க சிறிசேன கூறுகையில், “இலங்கையின் பரந்த மக்கள் தொகைக்கேற்ப, நகரத்துக்கு  மட்டுமின்றி, கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் இணைய, வசதி சென்றடைவதன் மூலம், பொருளாதார முக்கியத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக காணப்பட்டது. இந்தக் கனவை நனவாக்க, இலங்கையின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆ​ைணக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஷாமால் ஜயதிலக, இலங்கையின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு இடையிலுள்ள ஒழுங்குமுறை கட்டமைப்பினூடாக, டிஜிட்டல் பாலத்தை நிர்மாணிப்பதற்கான மூலோபாய வழிகாட்டலை ஏற்படுத்தியதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  

மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரியான நலின் பெரேரா கூறுகையில் “மொபிடெலின் மகுட வாசகமான We Care. Always என்பதற்கேற்ப மலிவு விலையில் தரமான மற்றும் குறைந்த அதிர்வெண் ஸ்பெக்ட்ரம் உள்ள 4G LTE தொழில்நுட்பமானது, அனைத்து குடிமக்களுக்கும் கிடைக்கும் என்பதை உறுதி செய்கின்றோம்.  இலங்கையின் தொழில்நுட்ப கட்டுப்பாட்டின் கட்டமைப்பை அமல்படுத்துவதில் முன்னின்று செயற்படும் TRCSL பணிப்பாளர் நாயகத்துக்கு நன்றி தெரிவித்தார். இந்த ஒழுங்குமுறையானது, இலங்கையின் டிஜிட்டல் உருமாற்றத்துக்குத் தொலைத்தொடர்பு இயக்குநர்களிடமிருந்து மேலும் முதலீட்டை ஊக்குவிப்பதாக அமைகின்றது. இந்த இயல்பான வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும், தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக மொபிடெலை முன்னிலைப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இலங்கையை உண்மையான முன்னேற்றத்துக்கு இட்டுச்செல்லும் என்பதோடு இலங்கைக்கான டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான அரசாங்கத்தின் பார்வைக்கு எடுத்துசெல்ல வாய்ப்பாகவும் அமைகின்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .