2024 மே 04, சனிக்கிழமை

முன்பள்ளி மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஹேமாஸ்

Freelancer   / 2023 ஒக்டோபர் 09 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக் காலங்களில் சிறுவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளை கவனத்தில் கொண்டு, ஹேமாஸ் அவுட்ரீச் மையம் (HOF), இலங்கை குழந்தைநல வைத்தியர் கல்வியகம் மற்றும் சிறுவர் ஆரம்ப விருத்திக்கான தேசிய செயலகம் ஆகியவற்றுடன் கைகோர்த்து, நாடளாவிய ரீதியில் முன்பள்ளி சிறுவர்கள் மத்தியில் தம்மை துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வந்துள்ளது.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்ட்டிருந்த வைபவத்தில், எமது சமூகத்தின் இளம் அங்கத்தவர்களை பாதுகாப்பது மற்றும் வலுவூட்டுவதற்கு அவசியமான சாதனங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தி சுவரொட்டி, குறு இசை மற்றும் வீடியோ ஆகியன அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

உலகளாவிய ரீதியில், நல்ல தொடுகை மற்றும் தீய தொடுகை தொடர்பான விழிப்புணர்வு, இளம் சிறார்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், இந்த முக்கியத்துவம் வாய்ந்த தகவலை இலங்கைக் கொண்டு வரும் பணிகளை HOF தற்போது மேற்கொள்கின்றது. துஷ்பிரயோகத்தை சிறார்கள் எதிர்நோக்கல், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற தொடுகைகள், பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு முகங்கொடுத்தால், பெற்றோர்களை அல்லது நம்பிக்கைக்குரிய வயது வந்தவரை நாடல் போன்றன தொடர்பில் விழிப்புணர்வூட்டுவது இந்தத் திட்டத்தின் பிரதான இலக்காகும்.

ஹேமாஸ் அவுட்ரீச் மையம் மற்றும் இலங்கை AYATI மையம் ஆகியவற்றின் நிறைவேற்று பணிப்பாளர் ஷிரோமி மசகொரல இந்தத் திட்டம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், “துஷ்பிரயோகங்களை தவிர்ப்பதற்கு முன்பள்ளி சிறுவர்களுக்கு வலுவூட்டுவது முக்கியமானது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். குறு இசைகள் மற்றும் செயற்பாடுகள் போன்றன தினசரி முன்பள்ளிச் செயற்பாடுகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, சிறுவர்களுக்கு அவ்வாறான நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான தெளிவுபடுத்தல் வழங்கப்படும். மேலும், நாடு முழுவதையும் சேர்ந்த 19,000 க்கும் அதிகமான முன்பள்ளிகளில் இந்த சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்படும். இதனூடாக காட்சி வெளிப்பாட்டை மேற்கொள்ள முடியும். சகல சமூகத்தாரையும் சென்றடையும் வகையில் இந்த தொடர்பாடல் ஆவணங்கள் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளன.” என்றார்.

சிறார்களை கவரும் வகையிலமைந்த குறு இசை மற்றும் வீடியோ போன்றன முன்பள்ளி சிறுவர்கள் மத்தியில் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் போதியளவு விழிப்புணர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கட் நட்சத்திரமும் சமூக செயற்பாட்டாளருமான ரொஷான் மஹாநாம சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகங்களிலிருந்து எவ்வா பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பான பெறுமதி வாய்ந்த வழிகாட்டல்களை வழங்கும் “ரொஷான் மாமாவிடமிருந்து ஒரு பாடம்” எனும் தலைப்பில் வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. வயது வந்தவரினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஏற்றுக் கொள்ளத்தகாத நடத்தைக்கும் மறுப்பு தெரிவிக்கும், ஓட்டமெடுத்து, நம்பிக்கைக்குரிய வயது வந்தவரிடம் தெரிவிக்கச் செய்யும் வகையில் மூன்று பிரதான தகவல்கள் அமைந்துள்ளன.

கடந்த சில வருடங்களில் சிறார்களுக்கு எதிரான வன்முறைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. போதியளவு விழிப்புணர்வின்மை மற்றும் அறிவின்மை போன்றவற்றினால் பாதிக்கப்படும் முன்பள்ளி சிறுவர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அத்தியாவசியமானதாகும்.

குறு இசை என்பது சகல முன்பள்ளிகளிலும் தினசரி வழமைச் செயற்பாடாக அமைந்திருக்கும். சிறுவர்களால் மனனம் செய்யப்பட்டு பாடப்படும். முன்பள்ளி ஆசிரியர்கள், ஆரம்ப சிறுவர் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் என சகல பங்காளர்களையும் உள்ளடக்கி, மாவட்ட மட்டங்களில் பயிற்சி அமர்வுகளும் முன்னெடுக்கப்படும்.

மசகொரல மேலும் தெரிவிக்கையில், “தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவசியமான அறிவையும் சாதனங்களையும் வழங்குவதனூடாக, சகல சிறுவர்களுக்கும் பாதுகாப்பான சூழலை எம்மால் உருவாக்கி வலுவூட்டக்கூடியதாக இருக்கும். எமது சமூகத்தின் இளம் மற்றும் இலகுவதில் பாதிப்புறக்கூடிய அங்கத்தவர்களுக்கு துஷ்பிரயோகத்துக்கு எதிராக செயலாற்றுவதற்கு வழிகாட்டல்களைப் பெற்றுக் கொடுக்க எம்முடன் கைகோர்த்துள்ள பங்காளர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.

இலங்கை குழந்தை மருத்துவ நிபுணர்கள் கல்வியகத்தின் (SLCP) சிறுவர் பாதுகாப்பு குழுவின் தலைமை அதிகாரி பேராசிரியர் அஸ்வினி டி பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் சிறுவர்களுக்கு எதிராக பதிவாகும் வன்முறைகளில் அதிகரிப்பு காணப்பட்டுள்ள நிலையில், இலங்கை குழந்தை மருத்துவ நிபுணர்கள் கல்வியகத்தின் (SLCP) சிறுவர் பாதுகாப்பு குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தகவல் அவசியமானதாக அமைந்துள்ளது. தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு சிறுவர்களுக்கு வலுவூட்டும் நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவது முக்கியமானதாகும். குழந்தை மருத்துவ நிபுணர்கள் எனும் வகையில், கடந்த காலங்களில் சிறுவர்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகளை நாம் அவதானித்திருந்தோம். அறிவூட்டலினூடாக தவிர்ப்புகளை எய்தக்கூடியதாக இருக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளோம். சர்வதேச நிகழ்ச்சி நிரல்களை நாம் ஆழமாக ஆராய்ந்து, இந்த குறு இசை, சுவரொட்டி மற்றும் வீடியோ ஆகியவற்றை தயார்ப்படுத்தியுள்ளோம். வயதுக்கு பொருத்தமான தொடர்பாடலின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து, ஹேமாஸ் அவுட்ரீச் மையத்தினால் இந்த முக்கியத்துவம் வாய்ந்த பணியை முன்னெடுக்க முன்வந்து கைகோர்த்துள்ளமைக்காக நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .