Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 23 , மு.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணய வழங்குநருக்கான, சிரேஷ்ட பாதுகாப்பற்ற தரப்படுத்தலை B1 இலிருந்து B2 க்கு குறைத்திருந்தது. மேலும் மேலோட்ட நிலையை மறைப்பெறுமதி என்பதிலிருந்து நிலையானதற்காக மாற்றியுள்ளது.
ஜுலை மாதத்தில் நாட்டில் காணப்பட்ட பொருளாதார சூழலை கவனத்தில் கொண்டு B1 மறை தரப்படுத்தலை மீண்டும் உறுதி செய்திருந்த நிலையில், தற்போது நாட்டில் காணப்படும் வெளியக, உள்ளகத் இறுக்கமான பொருளாதார நிலைகள், போதியளவு வெளிநாட்டு நாணயங்களின் இருப்புகளின்மை ஆகியவற்றுடன், அரசியல் நெருக்கடி நிலை, அதன் காரணமாக எழுந்துள்ள இதர அழுத்தங்கள் போன்றவற்றைக் கவனத்தில் கொண்டு, இந்தத் தரப்படுத்தலை வழங்கியுள்ளதாக மூடிஸ் தெரிவித்துள்ளது.
மூடிஸ் கவனத்தில் கொண்டிருந்த விடயங்களில், ஜுலை மாதத்திலிருந்து பொருளாதாரக் கொள்கைகள் மந்த கதியில் இடம்பெற்றிருந்தமை, அரசியல் சிக்கல் நிலை நிலவும் சூழலில், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டிருந்த தாமதங்கள் போன்றனவும் அடங்கியிருந்தன.
நிலையான புறத்தோற்ற நிலை என்பது B2 தரப்படுத்தல் நிலையில் காணப்படுவதாக அறிவித்துள்ளது. மூடிஸின் எதிர்பார்ப்பு என்பது, நாட்டில் தற்போது அரசியல் சிக்கல் நிலை காணப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் பொறுப்பேற்கும் அரசாங்கம், முக்கியமான பொருளாதாரக் கொள்கைகள், நாணய, பொருளாதார மீளமைப்புகளை மேற்கொள்வதில் அதிகளவு கவனம் செலுத்தி, நடுத்தரளவு கால அடிப்படையில் நாட்டின் கடன் நிலையை சீரமைக்கும் என்பதாக அமைந்துள்ளது.
ஆனாலும், அரசாங்கத்தின் கடன் மீளச் செலுத்தல் என்பது மிகவும் கவலைக்கிடமான நிலையில் காணப்படும் என்பதுடன், முதலீட்டாளர்கள், கடன் வழங்குநர்கள் திடீரெனத் தமது தீர்மானங்களை மாற்றியுள்ள நிலையில், இந்த இடரை எதிர்கொள்வதற்கு மட்டுப்படுத்தப்பட்டளவு ஒதுக்கங்களையே தன்வசம் கொண்டுள்ளதாக மூடிஸ் மதிப்பிட்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டு நாணயப் பிணை, வைப்புப் பெறுமதிகளுக்கான தரப்படுத்தலை Ba1 இலிருந்து Ba2 ஆக குறைத்துள்ளது. வெளிநாட்டு நாணயப் பிணைப் பெறுமதியை Ba2 இலிருந்து Ba3 ஆக குறைத்துள்ளது. வெளிநாட்டு நாணய வைப்பு பெறுமதி Ba2 இலிருந்து Ba3 ஆக குறைத்துள்ளது.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago