2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மேசன்களுக்கான NVQ சான்றளிக்கப்பட்ட அறிவு மேம்பாட்டுத் திட்டம்

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை (NEDA) மற்றும் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை (NAITA) உடன் இணைந்து, INSEE Cement நிறுவனம் மேசன்களுக்கான சான்றளிக்கப்பட்ட அறிவு மேம்பாட்டுச் செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

இதற்கான முக்கியமான முத்தரப்பு ஒப்பந்தம் அண்மையில் விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் கலாநிதி. சரத் அமுனுகம முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.

அறிவு மற்றும் கைத்திறனை விருத்தி செய்வதன் ஊடாக இலங்கையின் கட்டுமானத் துறையின் தரத்தினை மேம்படுத்தப்படுத்தும் திட்டமிட்டுள்ள INSEE Cement நிறுவனம், இந்த தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்பவர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி தகைமை தரம்-3 (NVQ3) சான்றிதழ் அளிக்கும். 

“அங்கிகரிக்கப்பட்ட தொழிற்தகைமை என்ற அடிப்படையில் மேசன்களுக்கான இந்த NVQ3 சான்றிதழ், நம்பகத்தன்மையினை வழங்குகின்றது. அதே சமயம் அவர்களின் தொழில் மற்றும் கல்வியினை உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது” என தெரிவிக்கும் NAITA தலைவரான கலாநிதி. சாறங்க அலஹப்பெரும INSEEசீமெந்து நிறுவனம் மற்றும் NEDA உடன் இணைந்து முன்னெடுப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற செயற்றிட்டங்களை முன்னெடுக்கப்பட வேண்டுமென எதிர்பார்ப்பதாக மேலும் தெரிவித்தார்.  

INSEE சீமெந்து நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக அறிவினை பகிர்ந்துகொள்ளும் ஒருநாள் அமர்வுகள் NAITA வினால் முன்னெடுக்கப்படும்.   
இலங்கையில் ஒரு வருட காலப்பகுதியில் பல அமர்வுகள் நடத்தப்படவுள்ளதோடு, தேசிய அளவில் 4,500 மேசன்களுக்கு நடாத்தப்படும் அமர்வுகள் ஊடாக 100 மேசன்கள் அடங்கிய புதிய குழுக்கள் NEDA வினால் அடையாளம் காணப்படும்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .