Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
காப்புறுதித்துறையைச் சேர்ந்த ஆயுள் மற்றும் பொது காப்புறுதிப்பிரிவுகளில் சிறப்பாக செயலாற்றியிருந்த நிறுவனங்களைக் கௌரவிக்கும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது காப்புறுதித்துறை விருதுகள் வழங்கும் நிகழ்வில், மருத்துவக்காப்புறுதியில் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்த நிறுவனத்துக்கான விருதை யூனியன் அஷ்யூரன்ஸ் ஜெனரல் லிமிட்டட் (UAG) தனதாக்கியிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை Fintelekt மற்றும் இலங்கைக் காப்புறுதி சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
உறுதியான காப்புறுதி மதிப்பீடு அணி மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை அணி ஆகியவற்றைக் கொண்டுள்ள, யூனியன் அஷ்யூரன்ஸ் ஜெனரல் லிமிட்டட் (UAG) மருத்துவக் காப்புறுதி வலையமைப்பு என்பது துறையில் காணப்படும் சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
பாரிய நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் தனிநபர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதுடன், இதற்காக உலகின் முன்னணி காப்புறுதி சேவை வழங்குநரான Fairfax உடன் கைகோர்த்துள்ளது. உலகின் வௌ;வேறு பகுதிகளில் குயசைகயஒ தனது செயற்பாடுகளைக் கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தின் நிபுணத்துவத்தின் உதவியுடன், யூனியன் அஷ்யூரன்ஸ் ஜெனரல் நிறுவனத்தினால் சிறந்த சேவைகளைச் சந்தைத் தேவைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2015 இல் வருமானத்திலும், வாடிக்கையாளர் எண்ணிக்கையிலும் தொடர்ச்சியான மற்றும் சிறந்த வளர்ச்சியை வெளிப்படுத்தியிருந்ததுடன், துறையில் உயர் சந்தைப்பங்கை வகித்த வண்ணமுள்ளது.
காப்புறுதி சேவைகளை மதிப்பிடும் செயற்பாடுகளைப் பொது முகாமையாளர் ருவந்தி குணரட்ன கருத்துத் தெரிவிக்கையில், 'சுகாதார காப்புறுதி ஒன்றை கொண்டிருப்பது என்பதன் முக்கியத்துவம் என்பது தொடர்பில் கவனயீனமாக இருக்கக்கூடாது என்பதுடன், குறைத்து மதிப்பிடவும் கூடாது.
அதிகரித்துச் செல்லும் மருத்துவச் செலவுகள் என்பது ஆயுள் முழுவதும் சேமித்தப் பணத்தை இல்லாமல் செய்யக்கூடும் என்பதுடன், தமது சுகாதார தேவைகளுக்காக மருத்துவக் காப்பீடொன்றைக் கொண்டிருக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி மக்கள் நன்கு அறிந்துள்ளனர்' என்றார்.
விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் நிரஞ்சன் நகேந்திரா கருத்துத் தெரிவிக்கையில், 'இந்த விருதை வெற்றியீட்டியுள்ளமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த விருதின் மூலமாக எமது விற்பனை, காப்புறுதி வழங்கல்கள் மற்றும் நட்டஈடுகள் ஆகியன கௌரவிக்கப்பட்டுள்ளன.
எமது வியாபாரத்தை வளர்;ப்பதற்கு இந்த அணிகள் அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்து வருகின்றன. மருத்துவக் காப்புறுதிக்கான சந்தை வாய்ப்பு என்பது தொடர்ந்து வளர்ந்து வருவதை எம்மால் தொடர்ந்து அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதன் மூலம் எமக்குக்கிடைத்துள்ள வாய்ப்புகள் பற்றி நாம் மிகவும் சந்தோஷமடைகிறோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .