Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 16 , பி.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் உலக சிறுவர் தினத்தன்று பெறுமதிகளை வலியுறுத்தும் வகையில், முன்பள்ளி ஆசிரியர்களின் அமர்வுடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. உலக சிறுவர் தினம் என்பது “யூனியன் சிங்கித்தோ” எனும் தொனிப்பொருளில் வெலிசற, நவலோக மைதானத்தில் 2016 ஒக்டோபர் 1ஆம் திகதி நடைபெற்றது.
இதில் முன்பள்ளி மாணவர்கள் தமது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தனர்.
யூனியன் சிங்கித்தோ நிகழ்ச்சியில் பல களிப்பூட்டும் அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. பங்குபற்றிய சிறுவர்களுக்கு நினைவிலிருக்கும் வகையிலான பல செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இலங்கை இராணுவத்தினால் நாய்கள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வுக்கு சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பலத்த வரவேற்பும் காணப்பட்டது. விளையாட்டு பகுதிகள் மற்றும் பவுன்சர்கள் போன்றவற்றில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்திருந்தனர். முகத்துக்கு வர்ணம் பூசுதல் மற்றும் யூனியன் பன்சா மற்றும் பஞ்சி உடன் விநோதமான முறையிலும் தமது பொழுதைக்களித்திருந்தனர்.
2 hours ago
2 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
20 Sep 2025