2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸின் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்றிட்டம் ஆரம்பம்

Gavitha   / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரையில் இலங்கை மாபெரும் பிரச்சினையாகத் காணப்படும் டெங்கு நோயை, ஒழிப்பது தொடர்பில் முன்னெடுக்கப்படும் தேசிய செயற்றிட்டத்துக்கு தனது பங்களிப்பை வழங்க யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இலங்கையினுள் இவ்வாறானதொரு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாக அமைந்துள்ளது.  

இதன் கீழ் முன்னெடுக்கப்படும் முதலாவது டெங்கு ஒழிப்பு சமூக செயற்றிட்டம், கிருலப்பனை சித்தார்த்தபுரம் பிரதேசத்தை மையமாகக் கொண்டு 2017 பெப்ரவரி 5ஆம் திகதி உத்தியோகபூர்வமான முறையில் நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தது. இந்த செயற்திட்டம், கொழும்பு மாநகர சபையின் மக்கள் சுகாதார திணைக்களம் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் மேற்பார்வையின் கீழ் குறுங்கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன. பிரதேசத்தின் குழந்தைகள் மற்றும் வயதுவந்தவர்கள் என சகலரும் அடங்கலாக டெங்கு ஒழிப்புக்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது இந்த நிகழ்ச்சின் பிரதான இலக்காக அமைந்திருந்தது.  

நிகழ்ச்சியின் கீழ் முன்னெடுக்கப்படும் மற்றுமொரு விசேட செயற்பாடாக, சித்தார்தபுர பிரதேசத்தின் 5 வலயங்களை பூகோள மட்டத்தில் பிரித்து அந்த வலயங்களில் சிறுவர் சங்கங்களை ஏற்படுத்துவதாகும். இந்த சங்கங்களைச் சேர்ந்த குழந்தைகள், இந்த மாற்றத்துக்கான அடிப்படையாக திகழ்வார்கள். இதன்போது பெற்றுக்கொள்ளும் வெற்றிகளை பொறுத்து, அந்த சங்கங்களைக் கௌரவித்து பரிசுகளை விநியோகிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 -18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் சித்திரப் போட்டிகள், கட்டுரைப்போட்டிகள், அறிவு காண் போட்டிகள் மற்றும் நாடகங்கள் போன்றன முன்னெடுக்கப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

அடிப்படையாக, இந்தத் திட்டத்தை ஒரு வருடம் வரை முன்னெடுப்பதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் அடங்கலாக இந்தத் திட்டத்தில் கைகோர்த்துள்ள சகல தரப்பினரினதும் இலக்காக அமைந்துள்ளது. இந்த செயற்றிட்டத்தைத் தொடர்ந்து, இப்பகுதியிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மற்றுமொரு பிரதேசமொன்றைத் தெரிவுசெய்து அப்பிரதேசத்தில் சாதாரண டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும். குறித்த செயற்றிட்டம் நிறைவில் இரு வலயங்களின் சாதனைகளை கவனத்திற்கொண்டு அந்தத் திட்டங்களின் வெற்றியைக் கௌரவிப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X