2025 ஜூலை 30, புதன்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றிக்கான பாதை ஆரம்பம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 24 , பி.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையர்களுக்கு வாழ்க்கையின் வெற்றியை எய்துவதற்கு வழிகாட்டும் வகையில் “வெற்றிக்கான பாதை” எனும் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்றை யூனியன் அஷ்யூரன்ஸ் ஆரம்பித்துள்ளது. இத்திட்டம், 2016 ஒக்டோபர் 21ஆம் திகதி முதல், டிசம்பர் 20ஆம் திகதி வரை முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

  மனிதர்களாகிய எங்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு தேவைகள் காணப்படுகின்றன. இந்தத் தேவைகள் பெரும்பாலும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, கல்வி, முதலீடுகள் மற்றும் ஓய்வுக்கால வாழ்க்கை போன்ற அடிப்படை பிரிவுகளில் வகைப்படுத்திக்கூறமுடியும். வாழ்க்கையின் வெற்றி என்பது, இந்தத் தேவைகளை எவ்வளவு சிறப்பாக நிர்வகித்துக் கொள்ள முடியும் என்பதைப்பொறுத்து அமைந்துள்ளது.

நாம் அனைவரும் வாழ்க்கையில் பெருமளவான விடயங்களை அறிந்து கொள்வது, எம்மை விட அதிகளவு அனுபவம் பெற்ற நபர் ஒருவரின் வழிகாட்டலின் மூலமாகும். எனவே, இந்தத் தேவைகளை நிர்வகித்துக்கொண்டு வெற்றியை நோக்கிப் பயணிக்கும் போது, அவ்வாறான ஒருவரின் வழிகாட்டல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். யூனியன் அஷ்யூரன்ஸ் என்பது, மூன்று தசாப்த காலமாக நாட்டு மக்களுக்கு அருகிலிருந்து சேவைகளை வழங்கி வரும் நிறுவனமாகும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் நாட்டு மக்கள் தொடர்பில் பரந்த அனுமானத்துடன், அவர்களின் தேவைகளை நன்குணர்ந்து அவற்றுக்கு பொருத்தமான வகையிலமைந்த வகையில் தனது சேவைகளை வடிவமைத்துள்ளது. அதுபோலவே, காலத்துடன் மாற்றமடைந்து செல்லும் வாழ்க்கை முறைகளுக்குப் பொருந்தும் வகையில் அந்த சேவைகளை மேம்படுத்த யூனியன் அஷ்யூரன்ஸ் ஒரு போதும் தவறியதில்லை. இது வரையிலும், அனைவரின் வாழ்க்கைய வெற்றிகரமானதாக மாற்றியமைக்கும் வகையில், பொருத்தமான தீர்வுகளை யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

அதன் பிரகாரம், கல்வித் தேவைகளுக்காக யூனியன் சுபர் இன்வெஸ்ட்டர் திட்டம் மற்றும் யூனியன் லைஃவ் அட்வான்டேஜ் போன்ற திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பயன்தரும் முதலீட்டு திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவோருக்காக யூனியன் சுபர் இன்வெஸ்ட்டர், யூனியன் சலேன்ஜர் மற்றும் சிங்கிள் பிரீமியம் திட்டம் போன்றன அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பரிபூரணத் தீர்வாக யூனியன் ஸ்மார்ட் ஹெல்த் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, சிரேஷ்ட பிரஜைகளுக்கான சுகாதார காப்பீட்டுத் திட்டமும் யூனியன் 60 ப்ளஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.   

ஒக்டோபர் 21ஆம் திகதி நாடு முழுவதிலும் பயணித்து சகல இலங்கையர்களுக்கும் வெற்றிக்கான பாதையை அறிமுகம் செய்வதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் அணியினர் தயாராகவுள்ளனர். இந்தக் காலப்பகுதியில், உங்களை சந்திக்க வரும் யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதி ஆலோசகர்கள் வாழ்க்கையின் வெற்றியை நோக்கிப் பயணிப்பது தொடர்பில் உங்களுக்கு விளக்கங்களை வழங்குவார்கள். முறையான பயிற்சிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் உங்களை சந்திக்க வரும் இந்தக் காப்புறுதி ஆலோசகர்களிடமிருந்து உங்கள் வாழ்க்கையின் வெற்றியை எய்துவது தொடர்பிலான பல விடயங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .